புதன்கிழமை, ஜனவரி 8, 2025

வில்லதனத்திற்கு பெயர் போன 5 படங்கள்.. ஒரே படத்தில் நின்னு பேசிய கதாபாத்திரங்கள்

திரைப்படங்களில் ஹீரோவின் கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட வேண்டும் என்றால், நிச்சயம் அந்த படத்தின் வில்லன் முக்கிய காரணமாக இருப்பார். அப்படி தமிழ் சினிமாவில் இதுவரை தாங்கள் நடித்த ஒரே படத்திலேயே தனி அடையாளம் பெற்று ரசிகர்களின் கைதட்டல்களை வாங்கிய ஐந்து வில்லன்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர்.

மன்சூர் அலிகான்: கேப்டன் விஜயகாந்தின் 100-வது திரைப்படமாக 1991 ஆம் ஆண்டு ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்துடன் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இந்தப்படத்தில் கேப்டன் பிரபாகரன் ஆக நடித்த விஜயகாந்த்துக்கு, பல்வேறு சட்டவிரோத செயல்களை செய்யும் படு வில்லனாக தனது மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். பிளாக்பஸ்டர் திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தான் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிக் காட்டியதால் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நாசர்: பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி உள்ளிட்டோர் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் மாயத் தேவர் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளி காட்டியவர் நடிகர் நாசர். இந்த படத்தில் இவருடைய இயல்பான நடிப்பு குருதிப்புனல், பம்பாய் போன்ற படங்களில் வில்லத்தனத்தில் பெயர்போன நடிகராகவே மாற்றியது.

 ரகுவரன்: தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்து பெயர் போனவர் நடிகர் ரகுவரன். அதிலும் குறிப்பாக ஒரே படத்தில் நின்னு பேசிய மார்க் ஆண்டனி ஆக பாட்ஷா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதன்பிறகு முதல்வன், ரட்சகன், முகவரி போன்ற அடுத்தடுத்த படங்களில் தன்னை தமிழ் சினிமா தவிர்க்க முடியாத வில்லன் ஆனார்.

பொன்னம்பலம்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் நாட்டாமை திரைப்படத்தில் வில்லனாக பொன்னம்பலம் தன்னுடைய மிரளவைக்கும் நடிப்பை வெளிக் காட்டி இருப்பார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு நின்று பேசிய காரணத்தினாலே அடுத்தடுத்து ஏகப்பட்ட பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பை சுலபமாக பெற்றார்.

மொட்ட ராஜேந்தர்: இவர் முதல் படமான நான் கடவுள் திரைப்படத்தில் தாண்டவன் கதாபாத்திரத்தில் ஈவு இரக்கமற்ற வில்லனாக பச்சிளம் குழந்தைகளை கண் காதுகளை பிடிங்கி பிச்சை எடுக்கும் வில்லனாக நடித்தது தனித்துவமான குரல் கெட்டப் மூலம் ஈஸியாக பிரபலமானார்.

எனவே இந்த 5 வில்லன்களும் தாங்கள் நடித்த முதல் படத்திலேயே தங்களது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்ததால் இன்றும் இவர்களுக்காகவே அவர்கள் நடித்த படங்களை ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

Trending News