முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முகமூடி படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு தேசத்திற்கு பறந்து சென்றார்.
பூஜா ஹெக்டே தெலுங்கில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட அல்லு அர்ஜுனுடன் அல வைகுண்டபுரம்லோ படம் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா புட்ட பொம்மா எனும் பாடல் தெலுங்கு தாண்டி தமிழ் வரை ஹிட்டடித்தது.

தற்போது பூஜா ஹெக்டேயிடம் ரசிகர் ஒருவர் நிர்வாணமாக இருக்கும் உங்கள் புகைப்படத்தை எனக்கு அனுப்புங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பூஜா ஹெக்டே அவரது சமூக வலைதளப் பக்கத்தில் காலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் அந்த ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் என கூறி வருகின்றனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் அவர்தான் அப்படி நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்கிறார் என்றால் நீங்களும் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள் என கூறி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு மட்டும் தெரிந்த இந்த விஷயத்தை புகைப்படம் எடுத்து ஊருக்கே தெரியப்படுத்தியது மிகப் பெரிய கேவலம் எனவும் கூறி வருகின்றனர்.