விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகிற பொங்கல் 13ம் தேதியன்று பிரம்மாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தினை பற்றி தகவல்கள் ஒவ்வொரு நாளும் வந்த வண்ணம்தான் உள்ளன.
எத்தனை அப்டேட்கள் படக்குழுவினர் கொடுத்தாலும் அத்தனையும் பத்தாது என ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அப்டேட்களை கேட்டு கேட்டு வருகின்றனர்.
விஜய் மற்றும் விஜய்சேதுபதி இவர்கள் இருவரும் இந்த படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது என்ன தகவல் என்றால் மாஸ்டர் படத்துக்காக ரசிகர்கள் உருவாக்கிய மோஷன் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
பல நாட்களாக கஷ்டப்பட்டு ரசிகர் உருவாக்கிய போஸ்டரை இயக்குனர் வெளியிடுவதால் தற்போது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்கள் அவரை பாராட்டியும் வருகின்றனர்.
முழு வீடியோ பார்க்க இத கிளிக் செய்யவும்.