உங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல் பாஸ்.? விமர்சனம் செய்து மொக்கை வாங்கிய சோயிப் அக்தர்

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையே 4வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது அதற்கு பாக் வீரர் சோயிப் அக்தர் இந்திய அணியை விமர்சித்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவுக்கு வந்தது, இப்போட்டியில் விழுந்த 30 விக்கெட்டுக்களை 28 விக்கெட்டுகளை பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர்.

இதற்கு சோயிப் அக்தர் இந்திய அணி மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைத்துள்ளது. அதனால் தான் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அணி மிகச்சிறந்த அணி எந்த மாதிரி பிட்ச்சிலும் விளையாடக்கூடிய அணி. அவர்கள் இங்கிலாந்தை கண்டு பயப்பட வேண்டாம். மைதானத்தை அவர்களுக்கு சாதகமாக அமைத்து விளையாடுவது குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வஞ்சப் புகழ்ச்சியாக பேசியுள்ளார்.

india-england
india-england

சோயிப் அக்தர் பேசியதற்கு வர்ணனையாளர்களும், மூத்த வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து உள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ஆடத் தெரியாதவனுக்கு தெரு கோணல் என்றாளாம் என கலாய்த்து வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner