வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய்யின் பேச்சை மீறி நடக்கும் அநியாயம்.. அடுத்த முதல்வர் தளபதியா, உதயநிதியா.? குளிர் காயும் ப்ளூ சட்டை

Vijay, Udhayanidhi: விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. இதனால் இப்போது உள்ள அரசியல் கட்சிகள் மிகுந்த பயத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் சினிமாவை பொறுத்தவரையில் அதிக ரசிகர் கூட்டம் விஜய்க்கு தான் இருக்கிறது. இதனால் விஜய் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் விஜய் ரசிகர்கள் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் விஜய் தனது ரசிகர் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு சில வேண்டுகோளை வைத்திருக்கிறார். அதாவது தன்னை மற்ற அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஓட்ட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

Also Read : அவ்வளவு சம்பளம்லாம் கொடுக்க முடியாது.. விஜய்யும், சன் பிக்சரும் சேர்ந்து செய்த பெரிய துரோகம்

அதையும் மீறி மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர். அதாவது தம்பி பொறுத்தது போதும், வா தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க நாங்கள் அமர்ந்திருந்த அரியணை உங்களுக்காக காத்திருக்கிறது என்று பேனர் வைத்துள்ளனர். மேலும் அதில் எம்ஜிஆர் மற்றும் காமராஜ் இருக்கும்படியான புகைப்படம் இருக்கிறது.

இவ்வாறு இந்த பிரச்சனை எரிகிற நெருப்பாக இருக்கும்போது அதில் குளிர் காயும் படியாக ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அதாவது இந்த போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டு தமிழகத்தின் வருங்கால முதல்வர் உதயநிதியா அல்லது விஜய்யா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

Also Read : விஜயகாந்துக்கு இதை செய்யாமல் விஜய் அரசியலில் ஜொலிக்க முடியாது.. நன்றி கெட்டவன் என்ற பெயர் தேவையா!

ஏற்கனவே உதயநிதி தரப்பிலிருந்து விஜய்யின் லியோ படத்திற்கு பல சிக்கலை கொடுத்து வருவதாக ரசிகர்கள் போர்க்கடி தூக்கி இருக்கின்றனர். இப்போது இந்த பேனரால் என்னென்ன பிரச்சனை வெடிக்க போகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இப்போது விஜய் லியோ படத்தை எந்த சிக்கலும் இல்லாமல் வெளியிட வேண்டும் என்று தான் முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இருக்கும் சூழலில் விஜய் பேச்சையும் மீறி அவரது ரசிகர்கள் செய்து வருவது தளபதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் இப்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் போல் இல்லாமல் வித்தியாசமாக செயல்பட வேண்டும் என்று விஜய் சில கொள்கையுடன் இருக்கிறார்.

blue-sattai-maran-vijay
blue-sattai-maran-vijay

Also Read : சென்சாரையே காது கிழிய கதறவிட்டாரா லோகேஷ்.? விஜய் மார்க்கெட்டை உடைக்க வெளியான போலி சர்டிபிகேட்

Trending News