வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்கும் லோகேஷ்.. 1008 வேலை இருக்கும்போது இது தேவையா!

லோகேஷ் படத்தில் ஒரு முறையாவது நடித்து விட வேண்டும் என பெரிய நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் மற்ற இயக்குனர்களை காட்டிலும் இவரது ஸ்டைல் வேறு விதமாக உள்ளது. அதுவும் இவரது படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள்.

இப்போது லோகேஷ் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மேலும் படப்பிடிப்பை விரைந்து முடித்து இதே ஆண்டு அக்டோபர் மாதம் லியோ படத்தை வெளியிட லோகேஷ் முடிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : பிசினஸை பெருக்கிக் கொள்ள லோகேஷ் தில்லாலங்கடி ட்ராமா.. அக்கட தேசத்தில் டாப் நடிகருடன் கூட்டணி

இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் என பலருக்கும் ஒரு ஆசை ஏற்படும். அதே ஆசை தான் தற்போது லோகேஷுக்கும் ஏற்பட்டுள்ளது. அதாவது இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்தில் நிலம் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து படங்களை தயாரித்து வருகிறார். அதில் தன்னுடன் பணியாற்றிய இணை இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

அதேபோல் தற்போது லோகேஷும் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க திட்டம் தீட்டி உள்ளாராம். இதில் தன்னுடன் இணை இயக்குனராக பணியாற்றிய ரத்னகுமார் இயக்கும் படத்தை முதலில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் லோகேஷ் ரசிகர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.

Also Read : லோகேஷ்க்கு முன்பே மல்டி யுனிவர்சை முயற்சி செய்த இயக்குனர்கள்.. பாரதிராஜா படத்துல இத கவனிச்சீங்களா!

ஏனென்றால் சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்கள் தயாரிப்பில் இறங்கி கடனால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் லோகேஷ் இயக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது. தொடர்ந்து அவர் படங்களை இயக்குவதிலேயே கவனம் செலுத்தினால் மிகப்பெரிய உயரத்தை அடையலாம்.

மேலும் லோகேஷ் எல்சியுவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தனக்கு 1008 வேலை இருக்கும்போது தேவையில்லாமல் லோகேஷ் தயாரிப்பில் மூக்கை நுழைக்க வேண்டாம் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அவர் தயாரிப்பை கைவிட அதிக வாய்ப்பு உள்ளது.

Also Read : லோகேஷ்சை விஜய் படுத்தும் பாடு.. தளபதி காட்டும் ஆர்வத்தால் காஷ்மீரில் நடக்கும் கலவரம்

Trending News