ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

சூர்யாவுடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன்.. அடுத்தடுத்து மாஸாக களமிறங்க உள்ள 5 படங்கள்!

தற்சமயம் தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்தி நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 5 திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு ரிலீஸாகிறது..

அதிலும் குறிப்பாக தல அஜித் நடித்த வலிமை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டது. அதன் பிறகு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வியாழக்கிழமை அன்று உலகெங்கும் தல அஜித்தின் வலிமை திரைப்படம் திரையிடப்படவுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருந்த வலிமை திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க இப்பொழுதுதில் இருந்தே கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.

அதுமட்டுமின்றி வலிமை படத்திற்கு முன்பே வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எப்ஐஆர் திரைப்படமும், நடிகர் விக்ரம் அவர் மகன் துருவ் சேர்ந்து நடிக்கும் மகான் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. எனவே விஷால் விஷ்ணு மற்றும் விக்ரம் நேரடியாக ஓடிடி தளத்தில் மோதிக்கொண்டு யாருக்கு ரசிகர்களிடையே அதிக ஆதரவு கிடைக்கப் போகிறது என்பதை காட்ட உள்ளனர்.

அதே தினத்தில் பிப்ரவரி 11-ஆம் தேதி அன்று விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படமும் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படமானது விவசாயின் அவசியத்தை உணர்த்தும் விதத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்ட உள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வந்திருக்கும் கடைசி விவசாயி திரைப்படம் உலகெங்கும் பிப்ரவரி 11ஆம் தேதி திரையிடப்பட உலகைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இவ்வாறு பிப்ரவரி மாதத்தில் எஃப் ஐ ஆர், மகான், கடைசி விவசாயி, வலிமை திரைப்படம் வெளியாவது மட்டுமின்றி சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் வரும் மார்ச் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

அத்துடன் இந்த படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மார்ச் 24-ஆம் தேதியன்று திரையரங்கில் ரிலீஸாகவுள்ளது. இவ்வாறு சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் திரையரங்கில் மோதிக்கொள்ளும் தரமான சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே இந்த 2 படங்களில் எந்தப் படம் ரசிகர்களை கவரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News