வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நயன்தாரா, தனுஷ் பிரச்சனையில் நம்மள மறந்துட்டாங்க.. சைடு கேப்பில் நழுவிய சூர்யா

Suriya: இன்று இணையத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வரும் விஷயம் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே உள்ள பிரச்சனை தான். திடீரென நயன்தாரா தனுசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தப் பிரச்சனை இப்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது.

அதாவது நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட இருக்கிறது. ஆனால் அதில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டதற்கு தனுஷ் 10 கோடி கேட்டு உள்ளதாக நயன்தாரா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் நயன்தாராவுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். மற்றொருபுறம் தனுஷ் நானும் ரவுடிதான் படத்தை தயாரித்த போது மூன்றில் ஒரு பங்கு தான் பணத்தை எடுத்தார். இதன் மூலம் மிகுந்த நஷ்டத்தை சந்தித்தார்.

நயன்தாரா, தனுஷ் பிரச்சினையில் சூர்யாவை மறந்த ரசிகர்கள்

மேலும் இப்போதும் அனுமதி வாங்காமல் பட காட்சிகள் பயன்படுத்தி உள்ளதால் தனுஷ் இவ்வாறு செய்துள்ளார் என்று அவருக்கு ஆதரவாகவும் பலர் கூறிவருகிறார்கள். இந்தப் பிரச்சினையில் நம்மளை மறந்து விட்டாரே என்று பெருமூச்சு விட்டுள்ளார் சூர்யா.

அதாவது கடந்த நவம்பர் 14ஆம் தேதி சூர்யாவின் கங்குவா படம் வெளியாகி இருந்தது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ட்ரோல் கண்டண்டாக மாறியிருக்கிறது. சிறுத்தை சிவா முதல் சூர்யா வரை பலரையும் கலாய்த்து மீம்ஸ் வெளியிட்டு வந்தனர்.

பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்த கங்குவா படத்தை கழுவி ஊற்றி வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக கங்குவா பற்றி மோசமான விமர்சனங்கள் தான் பரவி வந்தது. இப்போது நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சனையில் கங்குவா படத்தை மறந்து விட்டார்கள்.

Trending News