சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டியை கழுவி ஊத்திய ரசிகர்.. பதிலடி கொடுத்த சனம்!

உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற டிவி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஏழு மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி  ஒளிபரப்புவதோடு, உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்றவர்களில் ஒருவர் தான் சனம் ஷெட்டி. இவர் மாடல் அழகியும் நடிகையுமாவார். அதே போல் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை காட்டிலும் சனம் ஷெட்டியின் வெளியேற்றம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் சனம் வெளியே வந்த சமயம், ட்விட்டர் பக்கத்தில் சனம் ஷெட்டி ஹேஸ் டேக் ட்ரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றிற்கு ரசிகர் ஒருவர் கடும் எதிர்ப்பைத்  தெரிவித்து இருந்ததாகவும், அதற்கு சனம் நெத்தியடி பதில் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. ஆனால் வருகின்ற காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் காதலர் தின வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை பதிவிட்டார் சனம். மேலும் அந்த வீடியோவில் ஒரு அழகுசாதன பொருளையும் விளம்பரம் செய்தார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர் சனம் அழகுசாதன பொருட்களை விளம்பரம் செய்ததை எதிர்த்து ‘இதுதான் நாங்கள் உங்களை வெறுக்க காரணம். உங்களுக்கு வாக்களித்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். இன்னமும் சில பொருட்களை விளம்பரம் செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். இது எங்களுக்கு தான் அசிங்கம்’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த சனம், உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி என்றும், தான் அந்த பொருட்களை பயன்படுத்திய பிறகு அது பிடித்த தாலும், உள்ளூர் ஆதாரங்களுக்கு தான் மதிப்பு அளிப்பதாலும் தான் ப்ரோமோஷன் செய்ததாக பதிலளித்துள்ளார். மேலும் சனம் ஷெட்டியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Trending News