கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் எழுதி இயக்கிய ஜெய்பீம் படத்தை தயாரித்து நடித்த சூர்யாவுடன் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஜெய் பீம் திரைப்படம் காவல்துறையின் லாக்கப் மரணத்தால் நிகழ்ந்த கொடூரத்தை அம்பலப்படுத்தும் வகையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்தப்படத்தில் ராஜாக்கண்ணுவின் மனைவியாக செங்கேணி என்ற பார்வதி அம்மாள் அவருடைய வாழ்க்கையில் நடந்த கொடூரத்தை அப்படியே திரையில் காண்பித்து இருப்பார்கள். 1993 ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைதான ராஜாக்கண்ணு காவல்துறையால் லாக்கப்பில் அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கு வழக்கறிஞர் சந்துரு உதவியுடன் தொடர்ந்து நியாயம் கேட்டு தன்னுடைய கணவருக்காக போராடியவர் பார்வதி அம்மா.
ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு எப்படியாவது ஒரு வீடு கட்டிவிட வேண்டும் என்று போராடி அதை நிறைவேற்றாமல் இறந்து விடுவார். அது இன்றுவரை பார்வதி அம்மாவை செய்ய முடியவில்லை. எனவே இதை உணர்ந்த தமிழக அரசும் ராகவா லாரன்ஸின் பார்வதி அம்மாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
பார்வதி அம்மாள் தற்போது வறுமையில் பாடுவதை அறிந்த டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் செங்கேணி என்கிற பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்தார். இதேபோன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாகவே ராகவா லாரன்ஸ் ரூபாய் 5 லட்சம் பணத்தை வீடு கட்டிக் கொள்வதற்காக பார்வதி அம்மா கையில் வழங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கீழநத்தம் கிராமத்தில் பார்வதியின் மகளுக்கு நிலம் இருப்பதால் அந்த இடத்தில் வீடு கட்டும் முடிவில் இருக்கின்றனர்.
அதற்கு ஆகும் செலவிற்காக ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் ரூபாய் 5 லட்சம் பணத்தை கொடுத்திருக்கிறார். ராகவன் லாரன்ஸின் இந்த செயல் தற்போது அவருடைய ரசிகர்களை பெருமையடைய செய்வதுடன் அவரை பலரும் வெகுவாக பாராட்டுகின்றனர்.
