வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தேவையா இந்த பொழப்பு.? வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது வரை தனக்கான இடத்தை பிடிப்பதற்காக சினிமாவில் போராடி வருகிறார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற விஷ்ணுவிஷால் அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ராட்சசன் படத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர் என்ற படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது மோகன் தாஸ் என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். தற்போது இவருடைய புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

அதாவது சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முழுவதுமாக ஆடை இல்லாமல் போட்டோ ஷூட் எடுத்த அதை சமூக வலைத்தளத்தில் பரப்பி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். திரைத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் இதற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதற்கு அவரது மனைவி தீபிகா படுகோன் ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்.

ஆனால் இவ்வாறு ஆடையின்றி எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் இப்படியா பரப்புவது என்று நாலா பக்கத்திலும் கேள்விகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இப்போது ரன்வீர் சிங்கை அப்படியே காப்பியடித்து விஷ்ணு விஷாலும் ஆடையில்லாமல் போட்டோ எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் உலகத்தில் உள்ள கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் பயன்படுத்தி கண்டமேனிக்கு கிழித்து தொங்கவிட்டனர். உங்களுக்கு எல்லாம் இந்த பொழப்பு தேவையா என வசைபாடி வருகின்றனர். மேலும் உங்களுக்கு அவசியம் என்றால் நீங்கள் உங்க வீட்டு பெட்ரூமில் மாற்றிக் கொள்ளுங்கள் சமூகவலைதளத்தில் விடாதீர்கள் என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இப்போதுதான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்து ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வந்த நிலையில் வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டதுபோல விஷ்ணுவிஷால் எடுத்த போட்டோ ஷூட் அவரின் நற்பெயரை வீணாகிவிட்டது.

Trending News