வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காயத்ரி எனக்கு பொண்டாட்டி மாதிரி.. சர்ச்சை பேச்சால் சிக்கிய பிரபலம்

நடிகை காயத்ரி ஒப்பனை இல்லாத முக பாவம், அலட்டிக் கொள்ளாத நடிப்பு என தத்ரூபமாக நடிக்க கூடியவர். வழக்கமான ஹீரோயின் மெட்டீரியலாக இல்லாமல் காயத்ரி தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பார். இதனாலேயே காயத்ரிக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் உண்டு.

18 வயசு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காயத்ரி , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலமாக தான் பிரபலமடைந்தார். அதன் பின்னர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

Also Read: மாமனிதனால் விஜய் சேதுபதிக்கு வந்த நெகட்டிவ் விமர்சனம்.. ஹீரோவாக இனி தலை காட்ட முடியாதா!

காயத்ரியின் பெரிய பிளஸ் அவர் தமிழ் நன்றாக பேச தெரிந்த, தமிழ் வம்சாவளியை சேர்ந்த நாயகி. பொதுவாக இவர் புரியாத புதிர், நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என அதிகமாக விஜய் சேதுபதியின் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் வெற்றி படமான விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பின்னர் காயத்ரி விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் என்னும் படத்தில் நடித்தார். மாமனிதன் இயக்குனர் சீனு ராமசாமி எழுதி இயக்கிய படமாகும். விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, சீனு ராமசாமி இவர்கள் கூட்டணியில் அமைந்த நான்காவது திரைப்படம். இதில் காயத்ரி விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்தார்.

Also Read: எல்லா படத்திலும் என்னோட கதி இதுதான்.. புலம்பும் விக்ரம் காயத்ரி!

ஒரு கிராமத்தில் வாழும் பெண், அன்பான மனைவி, இரண்டு குழந்தைகளின் தாய் என நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தார். இந்த படத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் எப்போதுமே வித்தியாசமாக விமர்சனம் சொல்லும் கூல் சுரேஷ், காயத்ரி எதார்த்தமாக நடித்திருக்கிறார் என்று சொல்வதற்கு காயத்ரி எனக்கு பொண்டாட்டி, உங்களுக்கு பொண்டாட்டி என்று கூறியிருக்கிறார்.

இது போன்ற பேச்சுக்கு இப்போது மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படி தான் கூல் சுரேஷ் விருமன் படத்தில் நடித்த அதிதியை பாராட்டுகிறேன் என்ற பெயரில் தேவையில்லாத வார்த்தைகளை பேசி சிக்கலில் மாட்டினார். இப்போது காயத்ரியின் மீதான விமர்சனமும் மக்களிடையே எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.

Also Read: வெந்து தணிந்தது காடு, சிம்புக்கு ஒரு லட்சம் பைன் போடு.. சுக்குநூறான ஆடி கார்

Trending News