வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

காஞ்சமனை 4 என்று ஒரு படம் எடுங்க.. சுந்தர் சி, லாரன்சை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் காமெடி பேய் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர்களாக இருந்தவர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் சுந்தர் சி. இவர்கள் இருபது இயக்கத்திலும் இதுவரை வெளிவந்த முனி காஞ்சனா, காஞ்சனா 2, அரண்மனை, அரண்மனை 2 போன்ற அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இங்கு தான் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை கடைபிடிக்க தவறியுள்ளனர் இருவரும். கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தை கழுவி ஊற்றாத ரசிகர்களே கிடையாது. அந்த அளவுக்கு படம் முழுக்க ஆபாச வசனங்கள் பார்த்து பார்த்து சலித்து போன காட்சிகள் என ரசிகர்களை வெறுப்பேற்றியது.

kanchana-aranmanai-3-memes
kanchana-aranmanai-3-memes

சரி அந்தப் படம்தான் அப்படி என்று சுந்தர் சி எடுத்த அரண்மனை3 படத்திற்கு சென்றால் அங்கேயும் அதே கதைதான். என்னத்த சொல்லி என்ன பண்ண காசு செலவு ஆனது தான் மிச்சம் என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் ரசிகர்கள்.

kanchana-aranmanai-3-memes-1
kanchana-aranmanai-3-memes-1

இதை பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா. வழக்கம்போல் தங்களது சேட்டையை இணையதளங்களில் காட்ட ஆரம்பித்துவிட்டனர். சுந்தர் சி மற்றும் லாரன்ஸ் இருவரும் தங்களது மூன்றாம் பாகத்தில் சொதப்பியதால் இருவரும் சேர்ந்து ஏன் காஞ்சமனை என்ற பெயரில் நான்காம் பாகம் எடுக்க கூடாது என கிண்டல் செய்து வருகின்றனர்.

sundar-c-aranmanai3-1
sundar-c-aranmanai3-1

ஓடாத படங்களை அடுத்த பாகம் எடுக்கிறேன் என இயக்குனர்கள் ரசிகர்களை சலிப்படைய வைக்காமல் புதிய புதிய கதைகளை தேர்வு செய்து நல்ல நல்ல படங்களை கொடுத்தாலே அவர்களது பெயர் காலத்துக்கும் நிற்கும் என்பதை எப்போதுதான் உணர்ந்து செயல்பட போகிறார்களோ தெரியவில்லை. காஞ்சனா+ அரண்மனை= காஞ்சமணை

Trending News