ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அம்பத்தி ராயுடு ஞாபகமிருக்கிறதா? சஞ்சு சாம்சனை எச்சரிக்கும் ரசிகர்கள்

உலககோப்பை போட்டி முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவின் அடுத்த தொடராக, நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது. 20 ஓவர், டெஸ்ட் , ஒருநாள் போட்டி என மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

விராத் கோலிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோஹித் சர்மா தலைமையில் விளையாடவிருக்கும் வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் 17ஆம் தேதி அன்று தொடங்கவிருக்கிறது.

விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி போன்ற சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட், ஆவேஸ் கான், வெங்கடேஷ் ஐயர் போன்ற இளம் வீரர்களை கொண்டு களமிறங்குகிறது இந்திய அணி.

கேரளாவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனை இந்த தொடருக்கு தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் தான் தேர்வு செய்யப்படாத துயரத்தில் சஞ்சு சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவிற்காக அவர் செய்த சிறந்த பில்டிங் போட்டோக்களை பதிவு செய்துள்ளார். அவரை தேர்வு செய்யவில்லை என்ற கோணத்தில் இவ்வாறு போட்டோக்களை பதிவு செய்து தேர்வுக் குழுவிற்கு ஏதோ சொல்ல விரும்புகிறார் என தெரிகிறது.

Sanju-Cinemapettai.jpg
Sanju-Cinemapettai.jpg

சஞ்சு சாம்சன் பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அம்பத்தி ராயுடு போன்று அவசரப்படாதீர்கள் என அறிவுரை கூறி வருகின்றனர். தான் தேர்வு செய்யப்படாததை பொறுத்துக்கொள்ள முடியாத அம்பத்தி ராயுடு பிசிசிஐக்கு எதிராக நிறைய தேவை இல்லாத விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raydu-Cinemapettai-1.jpg
Raydu-Cinemapettai-1.jpg

Trending News