ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கங்குவா போய் சூதுகவ்வும் 2 படத்தை வைச்சு செய்யும் ரசிகர்கள்.. படத்துல அப்படி என்ன சொதப்பல்?

கங்குவா படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீசான முதல் நாளே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் படக்குழு அப்செட் ஆனது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கர் யூடியூப் சேனல்கள் படம் ரிலீசான முதல் நாளில் தியேட்டருக்கு சென்று ரிவியூ எடுக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.

சூர்யாவின் கங்குவா படம் மீதான விமர்சனம் ஓரளவு ஓய்ந்துவிட்டது. இப்போது வாண்டேட் ஆக வந்து மாட்டியுள்ள புதுப் படம் சூதுகவ்வும் 2.

நலன் குமாரசாமி – விஜய்சேதுபதி கூட்டணியில் 2013 ல் வெளியான சூதுகவ்வும் படத்தின் தொடர்ச்சி தான் சூதுகவ்வும் 2 ஆம் பாகம் என முதலில் தெரிவித்தனர்.

அதன்படி, சிவா, கருணாகரன், ராதாரவி, ஹரிஷா ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 13 ல் வெளியான படம் சூதுகவ்வும் 2 – நாடும் நாட்டு நடப்பும். எஸ்.ஜே. அருண் இப்படத்தை இயக்கியுள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ளார். இக்னேஷியஸ் இசையமைத்துள்ளார்.

இது காமெடி, அரசியல் கலந்த படமாக உருவாகியுள்ளது என கூறப்பட்து. இதைப் பார்த்த ரசிகர்கள் படத்தில் பல காட்சிகளில் சிரிப்பே வரவில்லை அதுதான் படத்தின் பெரிய மைனஸ் என விமர்சித்து வருகின்றனர்.

இதில், பெரிய நட்சத்திரங்கள் இல்லை. சீரியசான ரோல்களுக்கு, சந்திரசேகர், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் போன்ற சீனியர் நடிகர்கள் உதவியுள்ளனர்.

சூதுகவ்வும் படத்தில் என்ன குறை? ரசிகர்கள் கடுப்பானது ஏன்?

கதை பலவீனமாக உள்ளது என்று தெரிந்து எப்படி தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரிக்க முன் வந்தனர்? இதில் நடிகர்கள் பலர் இருந்தும் காமெடி காட்சிகளுக்கு முயற்சி எடுத்துள்ளனர்.

ஆனால் சிரிப்பு தான் வரவில்லை, இதில் இடம்பெற்றா பாடல்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கங்குவா படத்தை வைச்சு செய்த ரசிகர்கள் மிர்சி சிவாவின் சூதுகவ்வும் பட த்தை இப்போது ட்ரோல் செய்து வருகின்றனர். இத்தனை கோடி போட்டு படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், கதை, திரைக்கதையைப் பற்றி கேட்கவே மாட்டார்களா என விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இப்படத்துல அப்படி என்ன சொதப்பல் என கேட்டால் ஃப்ளோவான திரைக்கதை இல்லாதது. சிவாவின் ஒரே மாதிரியான நடிப்பு என விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News