புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 ரிலீஸ் தேதி அறிவிப்பு.. போடு, மஜாதான்!

பல இளம் ரசிகர்களை கார் ரேஸ் என்ற மேகத்துக்குள் தள்ளிய பெருமை ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்திற்கு உண்டு. கலக்கலான கார் ரேஸ் காட்சிகளுடன் போலீசுக்கும் கொள்ளையர்களுக்கும் நடக்கும் கதையாக உருவாகி வெற்றிகளை குவித்து வருகிறது.

இதுவரை ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படம் 8 பாகங்களை கடந்துள்ளது. இந்த எட்டு பாகங்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் தற்போது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஒன்பதாம் பாவம் உருவாகி வருகிறது.

வருகின்ற மே மாத ரிலீசை கருத்தில்கொண்டு உருவாகிவந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 (fast and furious 9)படம் தற்போது வெளியீட்டு தேதியில் இருந்து சற்று பின்தங்கிய அடுத்த மாதத்திற்கு சென்றுள்ளது. மேலும் ஜூன் மாதம் 25ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகப் போவதாக அறிவித்துள்ளனர்.

f9-release-date
f9-release-date

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் WWW டுவைன் ஜான்சன், ஜான் சீனா, வின் டீசல் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களை விட அதிக ரசிகர்களை கொண்டவர் என்றால் பால் வாக்னர் தான். கடந்த பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7 படம் உருவாகும் போது கார் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதன் பிறகும் இந்த படத்திற்கான மவுசு குறையவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு முறை ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படம் பார்க்கும் போது பால் வாக்னர் கதாபாத்திரம் கண்முன் வந்து செல்லும். 8 பாகங்களை கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள் தற்போது ஒன்பதாவது பாகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கண்டிப்பாக ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 படமும் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழிலும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News