வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பூர்வீக வீட்டிற்கும் ஸ்கெட்ச் போட்ட மாமனார்.. நடுதெருவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. மூர்த்தி உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரது அம்மா கனவில் வந்து விரைவில் வேற புது வீட்டிற்கு செல்லுமாறு கூறுகிறார்.

அதற்கேற்றார் போல் மூர்த்தி இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜீவாவின் தலையில் ஓடு விழும் அளவிற்கு ஆபத்து வந்தது. இதனால் உடனடியாக இந்த வீட்டை விற்க மூர்த்தி முடிவு செய்துள்ளார். ஆனால் வீடு வாங்க வருபவர்கள் உடனே வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வைக்கிறார்கள்.

Also Read : கரண்ட் பில் கட்ட கூட வக்கில்ல பாக்யா.. ஏளனமாகப் பேசிய கோபியின் வாரிசு

ஆனால் புது வீடு பார்ப்பது வரைக்கும் இந்த வீட்டில் வசிப்பதற்கு மூர்த்தி அவகாசம் கேட்கிறார். இந்த விஷயம் எப்படியோ மீனாவின் அப்பா ஜனார்த்தனன் காதிற்கு செல்கிறது. எப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சின்னா பின்னம் ஆகும் என காத்துக் கொண்டிருக்கிறார்
ஜனார்த்தனன்.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு மெயினான இடத்தில் இருப்பதால் நல்ல விலைக்குப் போகும் என ஜனார்த்தனன் இந்த வீட்டை தானே வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார். மூர்த்தியிடம் எவ்வளவு விலைக்கு வீட்டை கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள் என மீனாவின் அப்பா கேட்கிறார்.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளா இது? வெறும் பனியனில் அலறவிட்ட வைரல் புகைப்படம்

மொத்தமாக 70 லட்சம் வந்தால் கொடுத்து விடலாம் என மூர்த்தி சொல்ல மொத்த பணத்தையும் கொடுத்து நான் இந்த வீட்டை வாங்கிக்கிறேன் என ஜனார்த்தனன் கூறுகிறார். உடனே மீனா சந்தோஷப்படுகிறார். ஆனால் மற்ற எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஏனென்றால் ஏற்கனவே ஜனார்த்தனன் வில்லங்கம் பிடித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதனால் இவரிடம் வீட்டை விற்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் யோசிக்கிறது. ஆனால் வேறு வழி இல்லாமல் ஜனார்த்தனனே வாயை திறந்து கேட்டதால் மூர்த்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் பூர்வீக வீட்டை ஜெகநாதனுக்கு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. பழைய பகையை வைத்துக்கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நடுத்தெருவுக்கு ஜனார்த்தனன் கொண்டு வருவார்.

Also Read : விஜய் டிவி புகழுக்கு இது இரண்டாவது திருமணமா.? ஆதாரத்தோடு அம்பலமான உண்மை

Trending News