சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

டிஆர்பி ரேட்டிங்கில் 9வது இடத்திற்கு போன சன் டிவியின் பேவரைட் சீரியல்.. குறுக்கே வந்த விஜய் டிவி சீரியல்கள்

Serial TRP Rating: ஒவ்வொரு வாரமும் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மனதில் எந்த அளவுக்கு இடம் பிடித்திருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங்கின் புள்ளிகள் படி கண்ணித்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் அதிக புள்ளிகளை பெற்று முன்னுக்கு போயிருக்கிறது, எந்த சீரியல்கள் சரிவை சந்தித்திருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

சிங்க பெண்ணே சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 10 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அன்பு ஆனந்தி காதல் உறுதியாகிய நிலையில் மகேஷ் விடாப்பிடியாக வார்டன் மூலம் அவருக்கு நினைத்த விஷயத்தை அடைந்து விட வேண்டும் என்பதற்காக ஆனந்தியின் அம்மா அப்பாவை பார்த்து கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிக் கொண்டார். தன் காதலிக்கும் ஆனந்தி மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அதிரடியாக முடிவெடுக்கும் மகேஷின் காதல் அன்புவின் காதலுக்கு முன் தோற்றுப் போய்விட்டது.

அடுத்ததாக மூன்று முடிச்சு சீரியல் 9.82 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சூர்யாவை குடிப்பழக்கத்தில் இருந்து மாற்றி மாமனாரிடம் ஒப்படைத்து விட்டு நம் பழையபடி கிராமத்திற்கு போய்விடலாம் என்று நந்தினி செய்யும் அட்ராசிட்டி பற்றி புரிந்து கொள்ளாமல் சூரியா குடிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் முழுமையாக சூர்யா குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் நந்தினி மற்றும் சூர்யாவின் ரொமான்ஸ் ஆரம்பம் ஆகிவிடும்.

இதனைத் தொடர்ந்து கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.12 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கயல் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கௌதம் மற்றும் சிவசங்கரி செய்த சதி வேலைகள் அனைத்தும் எழிலுக்கு தெரிந்து விட்டது. அந்த வகையில் சிவசங்கரியை நேரடியாக மோத எழில் துணிந்து விட்டார்.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியல் 8.57 புள்ளிகளை பற்றி நான்காவது இடத்தில் இருக்கிறது. ரோகிணி பற்றிய ஒரு சில விஷயங்கள் மற்றும் தெரிந்த நிலையில் முக்கியமான பல விஷயங்கள் புதைந்து கிடப்பதால் மக்கள் அந்த ஒரு தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக மருமகள் சீரியல் 8.36 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்திலும், அன்னம் சீரியல் 7.73 புலிகளைப் பெற்று ஆறாவது இடத்திலும். ராமாயணம் சீரியல் 7.63 புள்ளிகளைப் பற்றி ஏழாவது இடத்திலும், எட்டாவது இடத்தில் 7 புள்ளிகள் பெற்று பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் பேவரைட் சீரியலை எதிர்நீச்சல் 2 சீரியல் 6.97 புள்ளிகளைப் பெற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது.

முதல் சீசன் மக்களின் பேவரைட் சீரியலாக இருந்து அனைவரும் கொண்டாடப்பட்ட நிலையில் இரண்டாம் பாகம் இதற்கு எதிர் மாறாக டாப் 5 கூட வர முடியாமல் தத்தளிக்கிறது. அடுத்ததாக பத்தாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.93 புள்ளிகளை பெற்று விஜய் டிவி அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்கள்.

Trending News