இந்திய அளவில் சாதனை புரியும் 30 வயதிற்கு கீழ் உள்ள சாதனையாளர்களை போர்ப்ஸ் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. இந்த சாதனையாளர்களை ‘போர்ப்ஸ் இந்தியா 30, 30 க்கு கீழ்’ என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறது.
மேலும் வருடத்திற்கு போர்ப்ஸ் இதழ் சார்பில் விளையாட்டு, அறிவியல், சமூக சேவை, இசை, மருத்துவம், தொழில், நிதி, உணவு, பேஷன், கல்வி, டிஜிட்டல், இ-காமர்ஸ், விவசாயம், விளம்பரம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 30 வயதிற்கு கீழ் உள்ள 30 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்களாம்.
இதன் வெற்றியாளர்களை ஆன்லைன் விண்ணப்பங்கள், நடுவர் சிபாரிசுகள், போர்ப்ஸ் இந்தியாவின் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து ஆலோசித்து தேர்வு செய்து வருகிறார்களாம். அந்தவகையில் தற்போது கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக நடித்துவருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பென்குயின்’, ‘மிஸ் இந்தியா’ போன்ற பெண்ணிய மைய திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது போர்ப்ஸ் பட்டியலில், என்டர்டைன்மென்ட் பிரிவில் கீர்த்தி சுரேஷ் தேர்வாகி உள்ளாராம். அதுமட்டுமில்லாமல், தென்னிந்திய அளவில் கீர்த்தி சுரேஷ் மட்டுமே போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி கீர்த்தி சுரேஷ், ‘போர்ப்ஸ் 30 பட்டியலில் தேர்வாகி உள்ளது பெருமை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் கீர்த்தி சுரேஷுக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனராம்.