புதன்கிழமை, மார்ச் 19, 2025

தளபதியை வைத்து 2 படங்களை இயக்கிய பகத் பாசிலின் அப்பா.. செம ஹிட்டான படம் ஆச்சே!

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பகத் பாசில். இவரது தந்தை பாசில் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ளார்.

2005ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பின்னர் தளபதி விஜய்யை வைத்து கண்ணுக்குள் நிலவு, காதலுக்கு மரியாதை என்ற படங்களை இயக்கியுள்ளார்.

தளபதி விஜய் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட படம் காதலுக்கு மரியாதை. இன்று வரை இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து படம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்து இருப்பார்.

மணிவண்ணன், சார்லி, சிவகுமார், ஸ்ரீதேவி, ராதாரவி என்று ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருப்பார்கள். இளையராஜாவின் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

சினிமாவில் வாரிசு நடிகர் என்ற அடையாளத்தை சுக்குநூறாக நொறுக்கி தற்போது தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை  உருவாக்கியுள்ளார் பகத் பாசில்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த Trance, C U Soon போன்ற படங்கள் பிரம்மாண்ட ஹிட் கொடுத்தது. 2021 இந்த வருடம் மாலிக், புஷ்பா, விக்ரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kadhalikku-mariyathai-cinemapettai
kadhalikku-mariyathai-cinemapettai
Advertisement Amazon Prime Banner

Trending News