செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

‘முன்னணி ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின்..’ தலகணத்தில் ஆடும் வாரிசு நடிகை!

சினிமாவிற்கு கதைக்களமும், கதாபாத்திரங்களும் மிக முக்கியத்துவமானதாக இருந்தாலும், கதாநாயகன் மற்றும் நாயகிகளை தேர்வு செய்வதில் இயக்குனர்ககளும் தயாரிப்பாளர்களும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

எனவே தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசனின் ட்விட்டர் பதிவானது சமூக வலைதளங்களில் ரசிகர்களாக பெரிதும் பேசப்படுகிறது.

ஏனென்றால் அதில் ஸ்ருதிஹாசன், “தோல்விகளை சந்தித்த ஹீரோக்களுடன் நான் ஜோடி போட்டாலும், என்னுடைய படம் சூப்பர் ஹிட் அடிக்கும்” என்று பெருமிதம் கொண்டுள்ளார்.

இதற்கு காரணம் என்னவென்றால், தெலுங்கில் ரவிதேஜா தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்ததும், அதன் பிறகு ஸ்ருதிஹாசனுடன் ‘கிராக்’ படத்தில் சேர்ந்து நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

shruti-haasan-2
shruti-haasan-2

அதேபோன்றுதான் மகேஷ் பாபுவும் வரிசையாக தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அவருடன் ஸ்ருதிஹாசன் நடித்த ‘ஸ்ரீமந்துடு’ என்ற படம் மெகா ஹிட் கொடுத்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு நான் எப்பொழுதும் லக்கி ஹீரோயினாக இருக்கிறேன். ஆகையால் நான் ஒரு ஹிட் பட நாயகி என்று டோலிவுட் எப்பொழுதுமே நினைவு கூறுகிறது.

அதுமட்டுமில்லாமல் தற்போது பவன் கல்யாணுடன் ‘வக்கீல் சாப்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப்படமும் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

Trending News