திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

இனிமேல் நீங்கள் பயப்பட வேண்டாம், உங்களுக்கு நான் இருக்கிறேன்.. அதிரடி முடிவெடுத்த பா. ரஞ்சித்

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து பின், 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அடுத்ததாக மெட்ராஸ் படத்தை இயக்கியதன் மூலம் வெற்றி இயக்குனராக மாறினார். பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தை இயக்கி உலக அளவில் கவனம் பெற்றார்.

பெரும்பாலும் பா. ரஞ்சித் படங்கள் புதுவிதமான கருத்துக்களை சொல்லும், அவரைப் போலவே அவரிடம் பணிபுரிந்த உதவி இயக்குனர்களும் வித்தியாசமான படங்களை உருவாக்கி வருகிறார்கள். என்னதான் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லும் கதைகளை வைத்திருக்கும் உதவி இயக்குனர்களுக்கு, அவ்வளவு சீக்கிரம் தயாரிப்பாளர்கள் யாரும் வாய்ப்புகளை தருவதில்லை.

Also Read: வீட்டிற்கு வெளிப்படையாய் செல்ல முடியாத விக்ரம் .. பா ரஞ்சித்தால் படாதப்பாடு

காரணம் இவர்கள் அனைவரும் நல்ல படங்கள் எடுத்தாலும் சமுதாயத்திற்கு புதுவிதமான கருத்துக்களை மக்களுக்கு திணித்து வருகின்றனர் என்ற பெயர் பெற்று விட்டனர். இதனால் இவர்களை கூப்பிட்டு படம் பண்ண யாருக்கும் விருப்பம் இல்லையாம்.

ஆகவே பா. ரஞ்சித் அதிரடியான முடிவெடுத்து, ‘இனிமேல் நீங்கள் பயப்பட வேண்டாம், உங்களுக்கு நான் இருக்கிறேன்!’ என்று சொல்லி அவர் தயாரிக்கும் அனைத்து படங்களும் தன் உதவியாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறார். வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பது பா. ரஞ்சித்தின் பெருந்தன்மை.

Also Read: பெரிய இடத்தை கடுமையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய பா.ரஞ்சித்.. வான்டடா தேடிக்கொண்ட ஆப்பு

அப்படி இவருடைய தயாரிப்பில் வெளியான படம் தான் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்து மான் போன்றவைகள் ஆகும். இந்தப் படங்களை எல்லாம் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர்கள் தான் இயக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு குதிரைவால் என்ற படத்தை பா. ரஞ்சித் தயாரித்தது மட்டுமல்லாமல் அந்தப் படத்தின் விநியோகஸ்தர் ஆகவும் மாறினார். இவ்வாறு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு வித்தியாசமான யுத்தியை பா. ரஞ்சித் கையில் எடுத்திருப்பது தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Also Read: 19ஆம் நூற்றாண்டின் சொல்லப்படாத வரலாறு.. விக்ரமின் நடிப்பை பற்றி ஓப்பனாக பேசிய பா ரஞ்சித்

- Advertisement -spot_img

Trending News