செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசுக்கு துணிவு காட்டிய பயம்.. அதிரடியாக விஜய் போட்ட கட்டளை

8 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக் கொள்ளும் அஜித் விஜய்யின் துணிவு மற்றும் வாரிசு படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியான துணிவு படத்தின் டிரைலர் வாரிசு படக் குழுவிற்கு பயம் காட்டி உள்ளது.

இதனால் புத்தாண்டு அன்று நேற்று ரிலீஸ் செய்ய இருந்த வாரிசு படத்தின் டிரைலரை வெளியிடாமல் தள்ளி வைத்துள்ளனர். ஏனென்றால் துணிவு படத்தின் டிரைலருக்கு நிகராக வாரிசு படத்தின் டிரைலரும் மிரட்ட வேண்டும் என்பதற்காக, ஒரு சில காட்சிகளை சேர்த்து வேற விதமாக டிரைலரை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விஜய் கட்டளை போட்டிருக்கிறார்.

Also Read: ஒரே ட்ரெய்லரில் பயத்தை காட்டிய துணிவு அஜித்.. மொத்தத்தையும் மாத்த போட்ட திட்டம்

ஏற்கனவே டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 5000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கொடுத்திருக்கின்றனர்.

இருப்பினும் துணிவு படத்திற்கு முன், தளபதி விஜய் மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக வாரிசு படத்தின் டிரைலரில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி ஜனவரி 4-ம் தேதி புதன்கிழமை அன்று வெளியிட முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read: வாரிசுக்கு முன்பே வெளியாகும் துணிவு டிரெய்லர்.. திட்டம் போட்டு காய் நகர்த்தும் தயாரிப்பாளர்

மேலும் பீஸ்ட் படத்தில் இருந்த தவறை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே வாரிசு பணத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 25 நிமிடமும், இரண்டாம் பாதியில் 1 மணி நேரம் 27 நிமிடமும் ஓடும் விதமாக ரசிகர்களுக்கு போரடிக்காமல் படத்தின் நேரத்தையும் குறைத்து இருக்கின்றனர்.

எனவே நாலா பக்கமும் யோசித்து விஜய் வாரிசு படத்தின் மூலமாக ரசிகர்களை குடும்ப செண்டிமெண்டில் கவர நினைத்திருக்கிறார். இவர்களது திட்டம் தல அஜித்தின் துணிவுக்கு முன் செல்லுபடி ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: துணிவு படத்துக்கு பயந்து வம்சி செய்த காரியம்.. எல்லாம் வீண் செலவு என்று புலமும் தயாரிப்பாளர்

Trending News