இங்கிலாந்து மற்றும் அஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கௌரவ போட்டி இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர். இருநாடுகளும் இந்த தொடர் நடைபெற்றால் அலுவலகப் பணிகளையும், வீட்டு வேலைகளையும் மறந்து மைதானத்திலேயோ அல்லது தொலைக்காட்சியின் முன்னோ போட்டியை காண அமர்ந்து விடுவார்கள்.
அப்பேர்பட்ட கௌரவ போட்டியை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. போராடி தோற்றிருந்தால் கூட பரவாயில்லை. இந்தத் தோல்வி எதிரணியினருக்கு ஒரு போட்டி உணர்வை கொடுக்கவில்லை. எளிதாக வீழ்ந்து விட்டோம் என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கேப்டன் ஜோ ரூட்.
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3க்கு 0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா எளிதாக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து நாட்டினர் அணியின் மீது மோசமான கடுப்பில் இருக்கின்றனர்.
2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பை தொடரில் மோசமாக விளையாடி வெளியேறியதும், மொத்த அணியையும் மாற்றி, எப்படி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றும் அணியாக மாற்றினார்களோ அப்பேர்ப்பட்ட அணி எனக்கு மீண்டும் வேண்டும் என ஜோ ரூட் கடுப்பாகி பேசியுள்ளார்.
இதன் காரணமாக தற்போது அணியில் விளையாடும் பலரும் நீக்கப்பட்டு புது வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரியவருகிறது. ஜோ ரூட் தவிர வேறு யாரும் ரன்கள் எடுக்காததால் முக்கியமாக பேட்டிங் வரிசையில் பல மாற்றங்கள் ஏற்படுத்த உள்ளனர்.
பந்துவீச்சிலும் ஆண்டர்சன் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் சாதிக்காததால் புது பந்துவீச்சாளர்களை அணியில் எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடர் தோல்வியின் காரணத்தினால் அவமானத்திலும், விரக்தியிலும் இருக்கிறார் கேப்டன் ஜோ ரூட்.