சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

திகட்ட திகட்ட கணவரை காதலித்த ஸ்ருதி.. மனதை கனக்க வைத்த கடைசி விளம்பர வீடியோ!

Actress Sruthi: சின்னத்திரை பிரபலங்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தற்போது உலுக்கி இருக்கும் விஷயம் தான் நடிகை ஸ்ருதியின் கணவருடைய மரணம். சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலின் மூலம் பிரபலமான இவர் அடுத்தடுத்து பல தொடர்களில் நடித்து முன்னேறினார்.

அதிலும் பாரதிகண்ணம்மா தொடரில் இவருடைய நடிப்பு மிரட்டலாக இருக்கும். இப்படி நடிப்பில் பிசியாக இருந்த ஸ்ருதி கடந்த வருடம் அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜிம் ட்ரெய்னரான இவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Also read: ஒரே வருடத்தில் கணவனை இழந்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.. மரண பயத்தை காட்டிய காரணம்

இப்படி ஒரு துயரத்தை ஸ்ருதிக்கு கடவுள் கொடுத்திருக்க வேண்டாம் என்பது தான் இப்போது பலரின் ஆதங்கமாக இருக்கிறது. ஏனென்றால் இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியா பக்கத்தில் அடிக்கடி தங்களின் வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவிட்டு வந்தனர். மேலும் இந்த ஜோடி வெளியிடும் க்யூட்டான ரீல்ஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.

அதில் கடைசியாக வெளியான இவர்களின் வீடியோ ஒன்று இப்போது பலரின் மனதையும் கனக்க வைத்துள்ளது. ஒரு நகைக்கடை விளம்பரத்திற்காக அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஸ்ருதி தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடுவதற்காக கணவரின் வருகைக்காக காத்திருப்பது போலவும், ஏக்கத்துடன் தங்களின் திருமண புகைப்படத்தை பார்ப்பது போலவும் காட்சிகள் இருந்தது.

Also read: மத்த சேனலின் டிஆர்பி-ஐ நொறுக்க கலாநிதி மாறன் போட்ட ஸ்கெட்ச்.. ஜெயிலர் தேதியை லாக் செய்த சன் டிவி

அதை தொடர்ந்து அவருடைய கணவர் நகைகளை வாங்கி பரிசளிப்பது போல் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருந்தது. அதன் இறுதியில் இந்த நகைகளை வாங்கிய கடைக்கு உன்னை கண்டிப்பாக அழைத்துச் செல்கிறேன் என அரவிந்த் சேகர் சொல்வது போல் வீடியோ முடிந்திருந்தது.

தற்போது இதை பார்த்து கண்கலங்கும் ரசிகர்கள் நிச்சயம் இப்படி ஒரு செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை என சோகத்துடன் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தன் காதல் கணவரை திகட்ட திகட்ட காதலித்த ஸ்ருதி இந்த இழப்பிலிருந்து மன தைரியத்துடன் மீண்டு வர வேண்டும் என்பது தான் பலரின் பிரார்த்தனையாக இருக்கிறது.

Also read: சன் டிவி வெளியிடும் ஜெயிலர் பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? ஜெட் வேகத்தில் எகிற போகும் டிஆர்பி

Trending News