வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சின்னத்திரை பிரபலங்களை களமிறங்கும் விக்ரம் படக்குழு.. முன்னணி நடிகைகளை நம்பாத லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இத் திரைப்படத்தைப் பற்றிய புதுப்புது தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. இதுவே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதாவது விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பெண்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளனர். கமல்ஹாசன் முந்தைய படங்களில் அவருடன் இணைந்து நடித்த நடிகை ஆண்ட்ரியா விக்ரம் படத்திலும் அவருடன் இணைந்து  நடித்துள்ளார்.

ஆனால் அவருடைய கதாபாத்திரத்தை பற்றிய தகவல்களை வெளியிடாமல் படக்குழு சஸ்பென்சாக வைத்துள்ளது. இது தவிர பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, ஸ்வதிஸ்டா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகைகளும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.

ஆனால் இப்படத்தில் எந்த ஒரு முன்னணி நடிகையும் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ் படத்தைப் பொருத்தவரை கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதனால் இப்படத்தில் எந்த ஒரு பிரபல முன்னணி நடிகையும் நடிக்க வைக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

விக்ரம் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நேரடியாக திரையரங்கில் வெளியாக உள்ளது. அதனால் படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது .

வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த திரைப்படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. முன்னணி நடிகைகளை நம்பாமல் லோகேஷ், கமல் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கொடுத்து தட்டிக் கொடுத்து உள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் பாராட்டுகின்றனர்.

Trending News