சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சண்டைக்காட்சிக்கு மட்டும் ஒன்றரை கோடியாம்.. பிரம்மாண்டமாக உருவாக உள்ள சுந்தர்.சி-யின் படம்!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கி நடித்திருந்த அரண்மனை படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.

இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இரண்டு படங்களும் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தன. நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட அந்தப் படங்களின் மூன்றாவது பாகத்தை இயக்குனர் சுந்தர்.சி தற்போது இயக்கியுள்ளார்.

இதில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளன.

இந்த படத்தில் இடம்பெறும் இறுதி சண்டைக் காட்சிக்கு மட்டும் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் செட் அமைத்து படமாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இதற்கான கிராபிக்ஸ் காட்சிகளை கடந்த ஆறு மாதங்களாக படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

தற்போது படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து அரண்மனை-3 படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. முந்தைய பாகங்களை விட அதிக நகைச்சுவை இடம்பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் படம் வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

aranmanai3-firstlook-poster
aranmanai3-firstlook-poster

Trending News