ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வசூலில் தட்டி தடுமாறும் லோகேஷின் ஃபைட் கிளப்.. 3வது நாள் வசூல் ரிப்போர்ட்

Fight Club movie 3rd day collection report: தற்சமயம் இளசுகளின் ஃபேவரிட் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் தயாரித்த முதல் படம் ஃபைட் கிளப். லோகேஷின் உதவி இயக்குனரான அப்பாஸ் ரஹமத் இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது.

உறியடி பிரபலம் விஜய்குமார் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், இதன் மூன்றாவது நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. வட சென்னையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் போதைப்பொருள், வெட்டு, குத்து என படம் முழுக்க ரத்த வாடை தான் வீசுகிறது.

Also Read: வசூலில் தட்டி தடுமாறும் லோகேஷின் ஃபைட் கிளப்.. 3வது நாள் வசூல் ரிப்போர்ட்

ஏற்கனவே லோகேஷ் இயக்கும் படங்களில் அதிக வன்முறை காட்டப்படுகிறது என குற்றம் சாட்டப்படும் நிலையில், அவர் தயாரிக்கும் படங்களும் அதே பாணியில் தான் இருக்கிறது என இந்த படமானது சோசியல் மீடியாவில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

ஃபைட் கிளப் படத்தின் 3வது நாள் வசூல் விவரம்

இதனால் கலவையான விமர்சனத்தை பெற்ற ஃபைட் கிளப் முதல் நாளில் 2 கோடி வரை வசூலித்தது. ஆனால் வீகெண்டில் இதன் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் லோகேஷின் ஃபைட் கிளப் படம் வசூலில் தட்டு தடுமாறுகிறது.

Also Read: தலைவர் 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஏப்ரலில் படப்பிடிப்பை கன்ஃபார்ம் செய்த லோகேஷ்

இரண்டாவது நாளில் 1.92 கோடி வசூலை பெற்ற ஃபைட் கிளப் படத்தின் மூன்றாம் நாள் வசூல் ரொம்பவே மந்தமானது. 3வது நாளில் ஃபைட் கிளப் 1.73 கோடியை மட்டுமே வசூலித்திருக்கிறது. நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூல் சரிவை நோக்கி செல்கிறது. இதனால் படக்குழுவினர் தற்போது மிகுந்த வருத்தத்துடன் இருக்கின்றனர்.

Trending News