திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பெண் பிள்ளைகளால் கண்ணீர் வடித்து அசிங்கப்படும் அப்பா பிரபலங்கள்.. 2 மகள்களால் பறிபோன ஷங்கரின் நிம்மதி

Director Shankar: பொதுவாக ஒரு தந்தையின் மிகப்பெரிய ஆசை என்னவாக இருக்கும் என்றால் தனது பிள்ளைகள் பெரிய நிலைமையில் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுவது தான். ஆனால் சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் சில பிரபலங்களின் வாரிசுகள் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள்.

அதுவும் ஆரம்பத்தில் இவர்கள் செய்த பாவம் தான் இப்போது அவர்களின் பிள்ளையை வாட்டி வருவதாக சிலர் கூறிவருகிறார்கள். அதாவது சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போகாத உயரம் கிடையாது. இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் ரஜினி சேர்த்த சொத்து எல்லாமே போவதற்கு தனது மகள்கள் தான் காரணம் என்று அவரே கூறியிருக்கிறார்.

Also Read : ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்.. சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை

அதாவது ரஜினி தமிழ்நாட்டில் சம்பாதித்தாலும் சொத்துக்களை அவருடைய சொந்த மாநிலத்தில் வாங்கி சேர்க்கிறார். இதனால் வரி முழுவதும் அங்கு செல்வதாக பலர் குற்றச்சாட்டு வைத்தனர். இந்த சூழலில் ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யா சமீபத்தில் விவாகரத்து பெற்றார். இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில் மறுமணம் செய்து வைத்தார்.

அடுத்ததாக கமலஹாசன் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இப்போது அவருடைய வாரிசான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் இருவரும் நடிகைகளாக உள்ளனர். அப்பாவை போல ஸ்ருதிஹாசனும் பல சர்ச்சைகளில் சிக்கி பெயரை டேமேஜ் செய்து கொண்டார். கமலின் இரு மகள்களுமே அவரைப் போல் சினிமாவில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல முடியவில்லை.

Also Read : மற்றவர்கள் கற்றுப்பார்கள் என்று கமல் மறைத்த 5 விஷயங்கள்.. இன்று வரை பேசப்படும் அபூர்வ சகோதரர்கள் அப்பு

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பல தயாரிப்பாளர்களை வாட்டி வதக்கி உள்ளார். இதன் காரணமாக அவரின் இரு மகள்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக இருக்கிறது. மூத்த மகளின் கணவரான ரோகித் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். இந்த விஷயம் வெட்ட வெளிச்சமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பிறகு இப்போது ஷங்கரின் பேச்சை மீறி அதிதி நடிகையாக படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். ஆனாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவரது நடிப்பு இல்லை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுபோல் தனது மகள்களால் ரஜினி, கமல், ஷங்கர் போன்ற பிரபலங்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறார்கள். மேலும் எம்ஜிஆர் ஏழை, எளிய மக்களுக்கு நிறைய உதவி செய்தாலும் கடைசி வரை பிள்ளைகள் இல்லாமல் கஷ்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : நிம்மதியான சாப்பாடு, உறக்கம் இல்லாமல் தவிக்கும் ஷங்கர்.. 2 மகள்களால் கண்ணீர் வடிக்கும் சோகம்

Trending News