செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

 80களில் வெளியில் தெரியாமல் நடந்த அட்ஜஸ்ட்மென்ட்.. தயாரிப்பாளர்களை நடிகைகள் கவனித்தால் மட்டுமே பட வாய்ப்பு

திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏனென்றால் சமீப காலமாகவே பல முன்னணி நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி எத்தனையோ ஹீரோயின்கள் தங்களுடைய லட்சியத்தை அடைந்திருக்கிறார்கள்.

இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் இப்போது மட்டுமல்ல 80-களிலும் தலைவிரித்து ஆடி இருக்கிறது. அப்போதெல்லாம் வெளியில் தெரியாமல் இருந்த இந்த பிரச்சனையை இப்போது பிரபல திரைப்பட விமர்சகரும் சென்சார் நிபுணருமான ஒருவர் தனது   ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக பதிவிட்டு பலரையும்  வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் ஐட்டம் பாடலுக்கே ஆட முடியுமா.? வைராக்கியத்துடன் இருந்த நடிகையின் நிலைமை

80, 90களில் அதிகமாக நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு இருந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனைகளை பேச அப்போது மீடியாக்கள் பெரிதாக இல்லை. நடிகைகளை பொம்மைகள் போல் நடத்தி உள்ளனர். இஷ்டத்திற்கு அந்த நடிகைகளை பந்தாடுவார்கள்.

பெரும்பாலும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை, இன்று மட்டுமல்ல 80களிலும் இருந்துள்ளது. அதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் நடிகைகள் அடுத்தடுத்த படங்களில் நடித்திருக்கின்றனர் என்பதை சென்சார் நிபுணர் பல உண்மைகளை போட்டு உடைத்துள்ளார். 

Also Read: கிழவனை அட்ஜஸ்ட் செய்ய முடியாது.. ரூல்ஸ் பேசிய நடிகையை படிய வைத்த இயக்குனர்

அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஒத்து வராத நடிகைகளை அப்படியே ஓரம் கட்டி விடுவார்கள். இதனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என வைராக்கியமாக இருந்த நடிகைகளும் தன்னுடைய லட்சியத்தை அடைய வேண்டும் என, அந்த விஷயத்தில் தளர்வு காட்டி இருக்கின்றனர்.

Trending News