வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2022-ம் ஆண்டிற்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள்.. தொடர்ந்து வெற்றிக் கொடியை பறக்கவிடும் சூர்யா

திரை உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் பெங்களூரில் 67-வது தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் கொடுக்கப்பட்டது. இதில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் திரைக்கு வந்த படங்களில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கு சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது ஜெய் பீம் படத்தில் கதாநாயகியாக நடித்ததற்காக லிஜோமோல் ஜோஸ்க்கு கொடுத்து கௌரவித்தனர். அதுமட்டுமின்றி சிறந்த படத்திற்காக ஜெய் பீம் படம் பெற்றது. மொத்தம் ஜெய் பீம் படம் மட்டும் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றது.

Also Read : தேசிய விருது மெடலை கழுத்தில் அணிந்து போஸ்.. சூர்யா ஜோதிகாவின் மகன், மகளின் புகைப்படம் வைரல்

மேலும் சிறந்த இயக்குனருக்கான சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்தை இயக்கியதற்காக பெற்றார். அதைப்போல் சிறந்த துணை நடிகருக்கான விருது சார்பட்டா பரம்பரையில் நடித்த நடிகர் பசுபதிக்கு கிடைத்தது. மேலும் சிறந்த துணை நடிகைக்கான விருது சூரரைப் போற்று படத்தில் நடித்த ஊர்வசிக்கு கிடைத்தது.

சிறந்த இசை ஆல்பத்துக்கான விருது சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் குமாருக்கு கிடைத்தது. சிறந்த பின்னணி பாடகருக்கான விருது சூரரைப் போற்று படத்தில் பாடிய கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா, ஆகாசம் உள்ளிட்டோர் பெற்றனர்.

Also Read : சுதா கொங்கராவை ஜல்லிக்கட்டு காளையுடன் ஒப்பிட்டு புகழாரம்.. அசரவைக்கும் மாதவன் பேச்சு

சிறந்த பின்னணி பாடகிக்கான விருது சூரரைப் போற்று படத்தில் ‘காட்டுப் பயலே’ பாடலைப் பாடிய தீ பெற்றார். மேலும் சிறந்த நடன கலைகளுக்கான விருது மாஸ்டர் படத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் அமைத்த தினேஷ் குமார் பெற்றார். மிகச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது சூரரைப் போற்று படத்திற்காக நிகேத் பொம்மி ரெட்டி பெற்றார். இவ்வாறு சூரரைப் போற்று படம் மட்டும் 7 விருதுகளை பெற்றது.

சமீபத்தில் 5 தேசிய விருதைப் பெற்ற சூரரைப் போற்று படம் தற்போது ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறது. மேலும் இதில் விருதுபெற்ற அனைவருக்கும் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் தங்களது சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Also Read : அந்த கேரக்டரை கையிலெடுக்கும் மிஸ்டர் பாலிவுட்.. சூர்யாவை விட சூப்பரா நடிப்பாரே

Trending News