சினிமாவை பொருத்தவரை ஒரு சில படங்களுக்கு ரசிகர்கள் மத்திய ஆதரவை கிடைத்தாலும் பல படங்களுக்கு பல்வேறு விதமான போராட்டங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி தமிழ் சினிமாவில் தடை செய்யப்பட்டு பின்பு எதிர்ப்பு கிளம்பிய படங்களை பற்றி பார்ப்போம்.
ஹே ராம்
காந்திஜியை தப்பாக காட்டியதாக இப்படத்திற்கு மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது பின்பு கமலஹாசன் காந்திஜியின் பேரன்களை கூட்டி வந்து பல விளக்கங்கள் கொடுத்து நான் அவரை நல்லவர் போல தான் காட்டி இருக்கிறேன் என நிரூபித்த பிறகு இப்படம் வெளியானது.
தலைவா
விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா குறிப்பிடும் வகையில் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருந்ததாக சர்ச்சை கிளம்பி பின்பு முதலில் மலையாளத்தில் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது.
விருமாண்டி
2004ஆம் ஆண்டு முதலில் விருமாண்டி படத்திற்கு முதலில் சண்டியர் என பெயர் வைத்தனர். பின்பு ஒரு சில சர்ச்சைகள் எழுந்ததால் படத்திற்கு விருமாண்டி என பெயர் மாற்றப்பட்டது. இப்படத்திற்கு பாமக கட்சியினர் பெரும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
வாட்டர்
வாரணாசியில் உள்ள விதவைகள் படும் கஷ்டத்தை சொல்லிய படம். ஆனால் அங்கே படத்தை எடுக்க முடியாமல் பல போராட்டம் வந்ததால் பின்பு ஸ்ரீலங்காவில் படத்தை எடுத்து முடித்தனர்.
ஆனந்தி
1975ஆம் ஆண்டு மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆனால் படத்தில் கதாநாயகி புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றதால் இப்படத்திற்கு தடை செய்யப்பட்டது.
த டா வின்சி கோட்
கிறிஸ்தவ அமைப்பை தப்பாகாட்டியதாக இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
விஸ்வரூபம்
கமல்ஹாசன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாகி திரைப்படம் விஸ்வரூபம். இப்படத்தில் முஸ்லிமை தீவிரவாதிகளாக காட்டியதாக முஸ்லிம் தரப்பிலிருந்து சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அப்படி எதுவும் முஸ்லிமை சித்தரிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. பல எதிர்ப்புகள் மூலம் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்தது.