Actor Dhanush : தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஆனாலும் தனது அடுத்தடுத்த படங்களின் வேலையில் தனுஷ் தீவிரம் காட்டி வருகிறார்.
அதிலும் நடிகராக மட்டுமன்றி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என ஆல்ரவுண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது லைன் அப்பில் உள்ள படங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த வருடம் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு தனுஷ் கேப்டன் மில்லர் படம் வெளியான நிலையில் இந்த படத்தில் கில்லர் கில்லர் என்ற பாடலை அவரே பாடியிருந்தார்.
அடுத்ததாக இந்த வருடம் மே மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு தனுஷின் ராயன் படம் வெளியாகிறது. இந்த படத்தில் தனுஷ் இயக்குனராகப் பணியாற்றுகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
சேகர் கம்முலாவின் குபேரா படத்தில் தனுஷ்
அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு இறுதியில் குபேரா படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மலையாள இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நாகர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்கள். படத்தின் வித்தியாசமான போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது.
மேலும் குபேரா படத்தில் தனுஷ் பாடல் பாடவும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக தனுஷ் தனது அக்காவின் மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.
மேலும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இளையராஜாவின் பயோபிக்கை எடுக்க இருக்கிறார். இதில் தனுஷ் தான் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மற்றொரு படம் உருவாகி வரும் நிலையில் அதை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.