புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தீபாவளி ரிலீஸை குறி வைக்கும் டாப் 2 ஹீரோக்களின் படங்கள்.. இந்தியன் 2 வுக்கு டஃப் கொடுக்க வரும் ஹீரோ

டாப் நடிகர்கள் படங்கள் பெரும்பாலும் பண்டிகை காலங்களை தான் குறி வைத்து ரிலீஸ் ஆகும். அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் மோதிக்கொண்டது. இதைத்தொடர்ந்து வருகின்ற பண்டிகைகளுக்கும் டாப் நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்ள இருக்கிறது.

லியோ : லோகேஷ், விஜய் இருவரும் மாஸ்டர் படத்திற்கு பிறகு லியோ படத்தில் கூட்டணி போட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தளபதியுடன் 14 வருடங்களுக்குப் பிறகு திரிஷா இந்த படத்தில் இணைந்துள்ளார். இப்படம் ஆயுத பூஜை விடுமுறையை கணக்கிட்டு அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Also Read : அதிக பட்ஜெட்டில் உருவாகும் 5 படங்கள்.. லியோ விஜய்க்கு டஃப் கொடுக்கும் ஹீரோ

ஜெயிலர் : நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.

கேப்டன் மில்லர் : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். பழங்கால கதை அம்சத்தை கொண்ட இந்த படத்திற்காக தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் கேப்டன் மில்லர் படம் தீபாவளி ரேஸில் களமிறங்குகிறது.

Also Read : விசாரணையை ஐஸ்வர்யா பக்கம் திருப்பிய போலீஸ்.. தனுஷ், ரஜினி வீட்டிலும் கைவரிசை?.

ஜப்பான் : தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு போட்டியாக கார்த்தியின் ஜப்பான் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே வித்யாசமாக இருந்தது.

இந்தியன் 2 : லைக்கா பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்திற்காக கமல் தீயாய் வேலை செய்த வருகிறார். இன்னிலையில் இந்தியன் 2 படம் எப்போது ரிலீஸாகும் என்று காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது என்ற தகவல் வந்துள்ளது.

சூர்யா 42 : வணங்கான் படம் டிராப்பான நிலையில் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42 வது படத்தில் நடித்த வருகிறார். மேலும் சூர்யா 42 படத்தின் போஸ்டரில் வித்தியாசமான லுக்கில் சூர்யா காணப்பட்டார். இந்நிலையில் இப்படம் இந்தியன் 2 படத்திற்கு போட்டியாக பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.

Also Read : சிம்ரனுக்காக மேனேஜர் வேலையை விட்டு வந்த சூர்யா.. முதல் பட ரகசியத்தை உடைத்த குணசேகரன்

Trending News