Ayudha Poojai Television Movies : இந்த வருடம் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து ஆயுத பூஜை விடுமுறை வர இருக்கிறது. இதனால் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வியாழக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படம் திரைக்கு வர இருக்கிறது. இதற்காக தலைவர் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர்.
என்னதான் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க கூட்டம் இருந்தாலும் வீட்டில் பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் தொலைக்காட்சியில் ஓடும் புதுப்படங்களை பார்க்கவும் ரசிகர்கள் ஏராளம். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பிரபல சேனல்கள் புது படங்களை இறக்கி டிஆர்பியை பெரும்.
அந்த வகையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு இந்த ஆயுத பூஜைக்கு படங்களை இறக்குகிறது. அந்த வகையில் அக்டோபர் 11ம் தேதி, சன் டிவியில் காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஆயுத பூஜை பண்டிகையில் தொலைக்காட்சியில் வெளியாகும் படங்கள்
மதியம் 3 மணிக்கு அஜித்தின் வீரம் படமும், 6.30க்கு விஜய்யின் நடிப்பில் உருவான பிகில் படமும் ஒளிபரப்பாகிறது. ஏற்கனவே இந்த படங்கள் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் மீண்டும் இந்த படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாகத்தான் இருந்து வருகிறார்கள்.
விஜய் டிவி பக்காவாக பிளான் போட்டு படங்களை இறக்க உள்ளது. அதன்படி காலை 11 மணிக்கு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படம் இடம்பெறுகிறது. மேலும் மதியம் 2.30 மணிக்கு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற பார்க்கிங் படம் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் காம்போ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மாலை 5.30 மணிக்கு சுந்தர் சி யின் இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். இந்த படம் தியேட்டரில் சக்கை போடு போட்ட நிலையில் விஜய் டிவியின் டிஆர்பி எகிற போகிறது.
போட்டி போடும் விஜய் டிவி, சன் டிவி
- விஜய் டிவி சீரியல் ஹீரோயின் உடன் நிச்சயதார்த்தம்
- ஜூனியர் சீனியர் பிரச்சினையால் மோதும் விஜய் டிவி பிரபலங்கள்
- விஜய் டிவியின் டிஆர்பி ஆட்டத்தில் பகடைக்காயாக சச்சனா