ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள 9 படங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பும் வெற்றி இயக்குனர்கள்

2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா என ரசிகர்களை வியப்படையச் செய்யும் வகையில் பெரிய இயக்குனர்கள் தங்களுடைய படங்களை ஒரே மாதத்தில் வரிசையாக ரிலீஸ் செய்திருக்கின்றனர். இதனால் சினிமா பிரியர்களுக்கு இந்த மாதம் முழுவதுமே கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.

திருச்சிற்றம்பலம்: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கியிருக்கும் திருச்சிற்றம்பலம் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸாகிறது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுடன் அனிருத் இணைந்திருப்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் உள்ளது.

குருதி ஆட்டம்: 8 தோட்டத்தை படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் திரில்லர் படமான இந்த படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில்,  வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

எண்ணித் துணிக: ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஜெய், அதுல்யா ரவி இணைந்து நடித்திருக்கின்றனர். வெற்றிச்செல்வன் இயக்கிய இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்திருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ரிலீசாகிறது.

காட்டேரி: யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய டீகே இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் வைபவ் கதாநாயகனாகவும் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார் ஆகிய இரண்டு கதாநாயகிகள் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். பல்வேறு காரணங்களால் படம் ரிலீஸ் செய்யப்படாமலேயே இருந்து நிலையியி நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸாகிறது.

டைரி: இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படமான இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பவித்ரா எடுத்திருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீசாகிறது.

பிசாசு2: மிஷ்கின் இயக்கத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த பிசாசு படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து, 2-வது பாகத்தையும் அவரே வெற்றிகரமாக இயக்கி முடித்திருக்கிறார். இதில் ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்தை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.

விருமன்: தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் இளைய மகனான அதிதி சங்கம் கதாநாயகியாக அறிமுகமாகும் இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை முத்தையா இயக்கியுள்ளார். ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸாகிறது.

பொம்மை: ராதாமோகன் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

யசோதா: அறிமுக இயக்குனர்களான ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம்  வரும் ஆகஸ்ட் 12ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

இதில் தனுஷின் திருச்சிற்றம்பலம், மிஸ்கினின் பிசாசு 2, சமந்தாவின் யசோதா போன்ற படங்களை ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்ததால் அந்த படம் வரும் மாதமான ஆகஸ்ட்டில் வெளியாவதால் அவர்களது எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.

Trending News