திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோ காட்டிய பயத்தில் செப்டம்பரில் வெளிவரும் 30 படங்கள்.. ஒரு ஹிட்டுக்காக தவமிருக்கும் ஜெயம் ரவி முதல் சசிகுமார் வரை

September Month Releasing Movies: லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வருகின்ற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு லியோ படம் வெளியாகிறது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் லியோ படத்துடன் போட்டி போட பயந்து கொண்டு செப்டம்பர் மாதமே நிறைய படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் இம்மாதம் மட்டும் கிட்டதட்ட 30 படங்கள் வெளியாகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் ஜவான் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் செப்டம்பர் மாதத்தில் பெரிய நடிகர்கள் மட்டுமின்றி சின்ன படங்களும் அதிகம் வெளியாகிறது. ஜெயம் ரவி முதல் சசிகுமார் வரை ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கிடக்கிறார்கள்.

Also Read : செப்டம்பர் 7ஐ குறி வைத்து வெளியாகும் 6 படங்கள்.. 600 கோடி வசூலை தாண்டி ஓடிடிக்கு வந்த ஜெயிலர்

இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் போகவில்லை. அந்த வகையில் ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் மட்டும் ஹிட் கொடுத்தது. தனியாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை.

அதேபோல் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படம் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் கொடுக்கவில்லை. இந்த சூழலில் செப்டம்பர் மாதத்தை எதிர் நோக்கி ஜெயம் ரவி முதல் சசிகுமார் வரை சில ஹீரோக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : நல்ல வேலை முந்திக்கிட்டு கேரியரை காப்பாற்றிய ஜெயம் ரவி.. தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ

அந்த வகையில் இந்த மாதத்தில் ஜெயம் ரவியின் இறைவன் மற்றும் சசிகுமாரின் நா நா படங்கள் வெளியாகிறது. மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதைத்தொடர்ந்து விஷால் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மார்க் ஆண்டனி படமும் செப்டம்பர் மாதம் தான் வெளியாகிறது.

அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் பல வருடங்களாக ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் இடம் பொருள் ஏவல் படம் ஒரு வழியாக இந்த மாதம் வெளியாகிறது. மேலும் தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்து வந்து பிரபாஸின் சலார் படமும் வெளியாகிறது. இதனால் செப்டம்பர் மாதம் செம விருந்தாக அமைய இருக்கிறது.

Also Read : 13 நடிகர்களை வைத்து சசிகுமார் ஆடப்போகும் ஆட்டம்.. பழைய ரூட்டை கையில் எடுக்கும் கிடாரி

Trending News