ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

60களில் ஆட்சி செய்த நடிகர்கள்.. மும்மூர்த்திகளாக தங்களுக்குள் பிரித்துக் கொண்ட படங்கள்

60, 70 களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த மும்மூர்த்திகள் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன். இவர்கள் மூவரின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். ஆனால் இவர்கள் மூவரும் தங்களுக்கு ஏற்றவாறு படங்களை பிடித்துக் கொண்டுள்ளனர்.

சிவாஜி கணேசன் : சிவாஜி எவ்வளவு பெரிய டயலாக் ஆக இருந்தாலும் அசால்டாக பேசக்கூடியவர். மேலும் அனைத்து விதமான பாவனைகளையும் முகத்தில் காட்டக் கூடியவர். இதனால் சிவாஜி உணர்ச்சி மிகுந்த குடும்ப கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதில் பெரும்பாலும் சிவாஜி, கே ஆர் விஜயா காம்போவில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

எம்ஜிஆர் : எம்ஜிஆர் அதிகம் அடித்தட்டு மக்களுக்காக போராடும் விதமான படங்களில் நடித்து வந்தார். இவரின் அரசியல் நுழைவிற்கு அவரது படங்களும் முக்கிய பங்கு வகித்தது. மேலும் அதிக சண்டைக் காட்சியை நிறைந்த படங்களில் எம்ஜிஆர் நடித்து வந்தார். மேலும் இவருடைய படங்களில் பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஜெமினி கணேசன் : தமிழ் சினிமாவில் இன்று வரை உள்ள நடிகர்களில் காதல் மன்னன் என்று சொன்னால் உடனே நமக்கு ஞாபகம் வருவது ஜெமினி கணேசன் தான். இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருந்தனர். பெரும்பாலும் ஜெமினி கணேசன் காதல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். சாவித்திரி,ஜெமினி கணேசன் ஜோடியில் அதிக படங்கள் வெளியாகி இருந்தது.

மேலும் இவர்களுக்கு இந்த படங்கள் தான் ஓடும் என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவர்களுக்கு ஏற்றார் போல் கதைகளையே தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர். அதன்பின் இவர்கள் மூவரும் இந்த மாதிரி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தனர்.

அதேபோல் காலப்போக்கில் ஆக்சன் படங்கள் என்றால் எம்ஜிஆர், குடும்ப கதையான படங்கள் என்றால் சிவாஜி, காதல் படங்கள் என்றால் ஜெமினி கணேசன் என முத்திரை குத்தப்பட்டு இருந்தனர். அதற்கு ஏற்றார் போல் இவர்கள் அவ்வாறு நடித்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

Trending News