வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சத்யராஜ்ஜை வில்லனாக மக்கள் ரசித்த 5 படங்கள்.. அம்மாவாசைய மறக்க முடியுமா!

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கிய சத்யராஜ் அதன் பிறகு கதாநாயகனாக பல படங்களில் நடித்த தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். அதன்பிறகு இவர் ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும், ‘லீ’ என்ற திரைப்படத்தினை தயாரித்தது அதில் தனது மகன் சிபிராஜை கதாநாயகனாக நடிக்க வைத்தார். இவர் இதுவரை நடித்த படங்களில் கதாநாயகனாக நடித்ததை விட வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.

அமைதிப்படை: 1994 ஆம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் அப்பா, மகன் இரட்டை வேடத்தில் சத்யராஜ் நடித்திருப்பார். இதில் மகனாக நடித்திருக்கும் சத்யராஜ் காவல்துறையிலும், தந்தையாக நடித்திருக்கும் சத்யராஜ் அம்மாவாசை என்ற கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாகவும் நடித்திருப்பார். இதில் அமாவாசையாக சத்யராஜ் தன்னுடைய உச்சகட்ட வில்லத்தனத்தை மகனிடமே காட்டில் அசத்தி நடிகராக மக்கள் மனதைக் கவர்ந்த்திருப்பார்.

24 மணி நேரம்: மணிவண்ணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சத்யராஜ் வில்லனாகவும், மோகன் கதாநாயகனாகவும் நடித்திருப்பார்கள். இவர்களுடன் ஜெய்சங்கர், நளினி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் சத்யராஜ் தன்னுடைய வில்லத்தனமான பார்வை, முரட்டுத் தனமான பேச்சினால் வில்லனாக ராமரத்தினம் கதாபாத்திரத்தில் நடிப்பால் மிரள விட்டிருப்பார்.

மிஸ்டர் பாரத்: 1986 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக சத்யராஜ் இந்த படத்தில் நடித்திருப்பார். இஞ்சினியர் கோபிநாத் கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் பாரத் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் தாயை கற்பழித்து சீரழித்த தந்தை கோபிநாத்தின் வில்லத்தனத்தை மகன் பாரத்திடமே காட்டும் சத்யராஜின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும்.

காக்கி சட்டை: 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சத்யராஜ் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து இருப்பார். 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெள்ளிவிழா கண்ட இந்தப்படத்தில் சத்யராஜ் விக்கி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் கை தட்டிற்கு சொந்தமானார்.

நூறாவது நாள்: மணிவண்ணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் சத்யராஜ் வில்லனாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதில் மொட்டை தலையுடன் சத்யராஜ் கொடூரமான வில்லனாக நடித்து திரையரங்கில் ரசிகர்களையும் பதைபதைக்க வைத்திருப்பார்.

இப்படி இவர் கதாநாயகனாக நடித்ததை விட வில்லனாக நடித்து ரசிகர்களை கதிகலங்க வைத்து, அதன்பிறகே கதாநாயகனாக அவர்களிடம் வலம் வந்தவர். இருப்பினும் இவர் வில்லனாக நடித்த போதே அவருடைய நடிப்பு வேற லெவல் என ரசிகர்களால் இன்னும் புகழப்படுகிறார்.

Trending News