Vijay Tv: பண்டிகை நாட்களில் தியேட்டரில் பல படங்கள் வெளியானாலும் டிவியில் சமீபத்தில் வெளியான படங்கள் திரையிடப்படும். அதை தான் பெரும்பாலான ரசிகர்கள் பார்க்க விரும்புவார்கள்.
அவ்வாறு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தியேட்டரில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாகிறது. அதே நாளில் விஜய் டிவியில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 ஒளிபரப்பாக இருக்கிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகியிருந்தது. தியேட்டரில் வசூல் வேட்டையாடு இந்த படத்தை விஜய் டிவி கைப்பற்றி இருப்பதால் டிஆர்பி எகிற போவது உறுதி.
ஏப்ரல் 14 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்கள்
இதற்கு போட்டியாக சன் டிவியும் கைவசம் சில படங்களை வைத்திருக்கிறது. அதாவது வாரிசு படம் காலையில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி படங்கள் திரையிடப்பட இருக்கிறது.
விடாமுயற்சி படம் தியேட்டரிலேயே பெரிய அளவில் போகவில்லை. இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதால் எந்த அளவுக்கு ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.
ஆகையால் புஷ்பா 2 படத்தை ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருப்பதால் விஜய் டிவி டிஆர்பி தான் தமிழ் புத்தாண்டு அன்று அதிக ரேட்டிங் பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொங்கலுக்கு வருகிறோம் என்ற படம் போடப்பட உள்ளது.
வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஆகையால் இந்த தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வகையில் வீட்டிலேயே புதுப்படங்களை பார்த்து மகிழலாம்.
Definitely not because pushpa 2 is not watchable in TV it’s a not a good content movie just shit scenes ara there. So Sun TV get high TRP on tamil new year