ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பாலா மீது அஜித்துக்கு கோபம் வரக் காரணம் இதுதானாம்.. நான் கடவுள் பஞ்சாயத்தை விளக்கிய தயாரிப்பாளர்

முதலில் பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் அஜீத் நடிக்க இருந்ததும், அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் தான் ஆர்யா அந்த படத்தில் நடித்ததும் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் எதனால் பாலா மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் இடையில் சண்டை வந்தது என்பது நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில் கடைசியாக படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் பாலாவுக்கும் அஜீத்துக்கும் என்ன பிரச்சனை என்பதை குறிப்பிட்டுள்ளார்.

முதலில் நான் கடவுள் படத்தை பிஎல் தேனப்பன் என்ற தயாரிப்பாளர் தான் தயாரிக்க இருந்தாராம். அஜீத் மனைவி ஷாலினியுடன் அவருக்கு நல்ல நட்புறவு இருந்ததால் அதன் மூலம் அஜித் பழக்கமாகி குடும்பத்தில் ஒருவர் போல பழகி வந்தார்களாம்.

அதன் காரணமாக தல அஜித்தை வைத்து பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தை ஆரம்பித்தாராம். ஆனால் பாலா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என யார் பேச்சையும் கேட்க மாட்டாராம். அவருக்கு என்ன தோணுதோ அதை செய்வாராம். இதன் காரணமாக இந்த தயாரிப்பாளருக்கும் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 20 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து தருகிறேன் என காசிக்குச் சென்றவர் 21வது நாள் தான் முதல் காட்சியை படமாக்கினாராம்.

மேலும் நினைத்த நேரத்தில் அஜித்தை அழைத்து ஷூட் செய்தாராம். அதுமட்டுமில்லாமல் தல அஜித்திற்கு படப்பிடிப்பில் தகுந்த மரியாதை கொடுக்கவில்லை எனவும் அரசல் புரசலாக பேசியது தயாரிப்பாளர் காதில் விழுந்துள்ளது.

bala-ajith-cinemapettai
bala-ajith-cinemapettai

என்னால் எந்த ஒரு தயாரிப்பாளரும் கஷ்டப்படக் கூடாது என அஜீத் சொல்ல, என் இஷ்டத்திற்கு தான் படம் எடுப்பேன் என பாலா சொல்ல வந்தது பஞ்சாயத்து. இதன் காரணமாகவே அஜீத்திற்கும் பாலாவுக்கும் பிரச்சனை முற்றி அஜீத் அந்தப் படத்தில் விலகியதாக குறிப்பிட்டுள்ளார்.

Trending News