வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கப்பெண்ணில் அன்புவை லாக் பண்ணும் ஆட்டோக்காரர், ஆதாரத்துடன் வரும் முத்து.. ஆனந்திக்கு அழகன் கிடைச்சாச்சு!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கடைசி வரை நான் தான் அழகன் என்று சொல்லாமலேயே வெளிநாட்டிற்கு போய் விட வேண்டும் என்பதுதான் அன்புவின் திட்டம்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற கதையாக அன்பும் ஆனந்தியும் சேர வேண்டும் என்று தான் இயக்குனர் திட்டமிட்டிருக்கிறார் போல. அன்பு எப்படியும் வெளிநாடு போக மாட்டான் என்பது நேயர்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனந்திக்கு அழகன் கிடைச்சாச்சு!

ஆனால் இது எப்படி நடக்கும், அன்பு வெளிநாடு போகும் நேரத்தில் ஆனந்தி அவன் தான் அழகன் என்று கண்டுபிடிப்பாளா என்பது தான் எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது. அழகன் இல்லையென்றால் ஆனந்தி தன்னுடைய காதலை ஏற்று கொள்வாள் என்று மகேஷ் மணல் கோட்டை கட்டினான்.

ஆனால் ஆனந்தி யார் நினைச்சாலும் அழகனை என்கிட்டே இருந்து பிரிக்க முடியாதுனு தலையில் ஆணி அடித்தது போல் மகேஷிடம் சொல்லி விட்டாள். இது மகேஷுக்கு பெரிய ஏமாற்றம் ஆகி விட்டது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்புவின் தங்கை யாழினி அவனுக்கு ஆனந்தி மீது காதல் இருப்பதை கண்டு பிடிக்கிறாள்.

அன்புக்கு போன் பண்ணி நீ ஆனந்தியை காதலிக்கலன்னா எதுக்கு வாங்க படுத்து தூங்குன தலையணை உறையை வெளிநாட்டிற்கு கொண்டு போற பெட்டியில் எடுத்து வச்சுருக்க என்று கேட்கிறாள். ஒரு வழியாக பங்களாதேஷ் போக வீட்டிலிருந்து கிளம்பும் அன்பு ஒரு ஆட்டோவில் இருக்கிறான். அழகன் யாரென்று தெரிந்த ஆட்டோக்காரர் தான் அவன் ஏறிய ஆட்டோவின் ஓட்டுநர்.

அவர் அன்புவை ஆட்டோவில் உட்கார வைத்து விட்டு ஆனந்திக்கு போன் பண்ணுகிறார். அதே மாதிரி முத்து ஆனந்தியிடம் அழகன் யாரென்று சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்து அவளை நெருங்குகிறான். எது எப்படியோ ஆனந்திக்கு அன்பு தான் அழகன் என்று இவர்கள் இருவரில் யாரோ ஒருவர் மூலம் தெரிய போகிறது.

Trending News