கல்யாணம் பண்ணி 2 மாதத்தில் குழந்தை, நான்கு வருடத்தில் விவாகரத்து.. மௌனம் கலைத்த பாண்டியா

20 ஓவர் உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு அமோக வரவேற்பு கொடுத்து ரசிகர்கள் அசத்தினார்கள். பாண்டியாவை மும்பையில் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால் தற்போது பாண்டியாவின் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பாலிவுட் பிக் பாஸ் சீசன் 8 புகழ் மாடல் அழகியான நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஹார்திக் பாண்டியா. நடாஷா செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒரு நடன கலைஞர், மாடல் அழகியும் கூட. ஒரு பார்ட்டியில் இருவரும் சந்தித்து நட்பாய் பழகி அதன் பின்னர் காதல் வலையில் விழுந்தனர்.

காதலிக்கும் போதே இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இவர்களது திருமணம் 2020 மே 31ஆம் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டு மாதத்தில் ஜூலை 30 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு அகஸ்தியா என பெயரிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் பாண்டியா தம்பதியினர்.

இப்பொழுது இந்த நான்கு வருட காதல் கசந்துள்ளது. இருவரும் பிரிந்து வாழப்போவதாக முடிவெடுத்து விட்டனர். இதை அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியா அறிவித்துள்ளார்.

மௌனம் கலைத்த பாண்டியா

தற்போது அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோக்களை எல்லாம் நீக்கிவிட்டனர். தனித்தனியாக இருக்கும் போட்டோக்கள் மட்டுமே உள்ளது. அதுமட்டுமின்றி தனது சொந்த நாடான செர்பியாவிற்கு கிளம்பிவிட்டார் நடாஷா.

பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு ஆண்டுகால குடும்ப வாழ்க்கைக்கு பிறகு நானும் நடாஷாவும் பரஸ்பரமாக பிரிகிறோம். ஒன்றாக வாழ்வதற்கு முயற்சி செய்தும், அவை பலனளிக்கவில்லை. நாங்கள் சேர்ந்து வாழ்ந்த மகிழ்ச்சியான தருணத்தை மதித்து இருவரும் பிரிகின்றோம். எங்கள் குழந்தை அகஸ்தியாவின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு துணை நிற்போம் என அறிவித்திருந்தார் ஹார்திக் பாண்டியா.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்