செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கழுதை கெட்டா குட்டி சுவரு.. முடிவான லியோ ஆடியோ லான்ச், எங்க நடக்குது தெரியுமா?

Leo: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா முடிந்த நாளிலிருந்தே லியோ ஆடியோ லான்ச் எப்போது என்ற ஆர்வம் தான் பலருக்கும் இருந்தது. அதை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது கடந்த இரண்டு மாதமாகவே லியோ இசை வெளியீட்டு விழா மலேசியா அல்லது துபாய் போன்ற நாடுகளில் தான் நடக்கும் என்று பேசப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல் விஜய், லோகேஷ் இருவரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்கப் போகிறார்கள் என்று கூட தகவல்கள் கசிந்தது.

Also read: லியோ ரிலீஸுக்கு வந்த பெரும் சிக்கல், லோகேஷ் தலையில் விழுந்த இடி.. ஜெயிலர் வசூலை உடைக்க தளபதிக்கு வாய்ப்பு இல்லையாம்

ஆனால் இது எதுவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே இருந்தது. இதனால் நொந்து போன ரசிகர்கள் இசை வெளியீட்டு விழா எங்க, எப்போ நடக்கும் என்று எதிர்பார்த்து வந்தனர். அந்த வகையில் கழுதை கெட்டா குட்டி சுவரு என்பது போல் சென்னையிலேயே விழாவை நடத்தி விடலாம் என பட குழு முடிவு செய்துள்ளார்களாம்.

அதன்படி டாப் ஹீரோக்களின் பட இசை வெளியீட்டு விழாக்கள் அனைத்தும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தான் நடக்கும் அதேபோன்றுதான் லியோ இசை வெளியீட்டு விழாவும் அதே இடத்தில் நடைபெற இருக்கிறது. இதில் எந்த மாற்றமும் கிடையாது.

Also read: மகனை பழிவாங்க எஸ்.ஏ.சி பண்ண மோசமான வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வரும் தளபதியின் நண்பன்

மேலும் இதில் ஒரு முக்கிய விஷயமும் இருக்கிறது. அதாவது விஜய்யின் செயல்பாடுகள் சமீப காலமாக அரசியல் நகர்வுக்கான முன்னோட்டமாக இருக்கிறது. அதனால் இசை வெளியீட்டு விழாவையும் அவர்கள் ஒரு அரசியல் கலந்த நிகழ்வாக நடத்தப் போகிறார்களாம்.

இதன் மூலம் மாநாடு போல் கூட்டத்தை கூட்டவும் பட குழு தயாராகி கொண்டிருக்கிறது. அதன் படி வரும் செப்டம்பர் 23 அல்லது 30 ஆகிய இரு தேதிகளை தயாரிப்பு தரப்பு லாக் செய்து வைத்திருக்கிறார்கள். இதில் ஏதோ ஒரு நாளில் லியோ இசை வெளியீட்டு விழா கட்டாயம் நடக்கும் என தெரிகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: விஜய்க்கு சொம்படித்து ரஜினியை கவிழ்த்து விடும் பிரபலம்.. ஜெயிலர் வெற்றிக்கு சொன்ன மொக்கையான காரணம்

Trending News