சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கவின் காதல் என்னாச்சு என கேட்ட ரசிகர்கள்? ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய லாஸ்லியா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிரபலங்கள் தான் கவின் மற்றும் லாஸ்லியா. கவின் ஏற்கனவே விஜய் டிவியில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பிரபலம்.

ஆனால் லாஸ்லியா இலங்கையில் ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அவரை விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் களம் இறக்கி விட்டு தற்போது சூப்பர் ஸ்டார் நாயகியாக மாற்றிவிட்டனர். அந்தளவுக்கு லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

லாஸ்லியாவை பற்றி ஒரு சின்ன செய்தி கிடைத்தாலும் அதை இணையதளங்களில் டிரெண்ட் செய்து விடுகின்றனர். மேலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலித்து வந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

இடையில் லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த சீசன் முடிந்து சில வருடங்கள் ஆனாலும் சமூக வலைதளங்களில் கவின் மற்றும் லாஸ்லியா புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் ரகசியமாக காதலித்து வருவதாகவும் புரளியை கிளப்பி விட்டனர். இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்களில் சிலர் கவின் காதல் என்னாச்சு? என கேட்டுள்ளனர்.

kavin-losliya-cinemapettai-01
kavin-losliya-cinemapettai-01

இதனால் டென்ஷனான லாஸ்லியா, தேவையில்லாத விஷயங்களை கிளற வேண்டாம் என ஒரே வார்த்தை கூறி விட்டாராம். இதனால் கவிலியா ஆர்மியே சோகத்தில் இருக்கிறதாம். நட்சத்திர ஜோடி ரேஞ்சுக்கு பேசப்பட்ட கவின் லாஸ்லியா இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

Trending News