2021இல் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட படம் புஷ்பா. இந்த படத்தை இயக்கியவர் சுகுமாரன். அதன் பின் மூன்று வருடம் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. இதன் சூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமாரன் இருவருக்கும் பிரச்சனையும் ஆரம்பித்தது.
இவர்களுக்குள் என்ன மனக்கசப்பு என்று தெரியவில்லை, சூட்டிங் ஸ்பாட்டில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே கிடையாதாம். திடீரென அல்லு அர்ஜுன் ஒரு மாத காலம் குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்று விடுவாராம். அவர் வரும்பொழுது இயக்குனர் சுகுமார் எங்கேயாவது போய்விடுவாராம்.
இருவருக்கும் இப்படி ஒரு ஈகோ பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது இந்த படம்.
சின்ன கவுண்டர் தீர்ப்புக்கு அடி பணிந்த பையர் புஷ்பராஜ்
நெட் பிலிக்ஸ் ஒடிடி நிறுவனம் இதை 270 கோடிக்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்து விட்டனர். ஆனால் இயக்குனர் மற்றும் ஹீரோவுக்கு ஏற்பட்ட மோதலால் இது குறிப்பிட்ட நேரத்தில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இப்பொழுது சின்ன கவுண்டர் போல் இருவருக்கும் இடையில் உள்ள மோதலை தீர்த்து வைத்துள்ளது தயாரிப்பு நிறுவன மைதிலி மூவி மேக்கர்ஸ்.
இப்பொழுது இதன் கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. அக்டோபர் பத்து வரை இதற்கு நாள் குறித்து உள்ளனர். அன்றே இந்த படத்தை முடித்துவிட்டு பூசணிக்காயும் உடைக்க உள்ளனர். டிசம்பர் 6ஆம் தேதி இந்த படம் உறுதியாக ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்துவிட்டனர்.
- புஷ்பா வரலைன்னு தெரிஞ்சதும் சுதந்திரமா துண்டை போட்ட விக்ரம்
- அடேங்கப்பா புஷ்பா 2 ஓடிடி பிசினஸ் இத்தனை கோடியா
- புஷ்பா 2 க்கு புலி மட்டும் வழிவிடல, விலகிப் போன 4 படங்கள்