வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அண்ணாச்சியோட ரோல்மாடல் இவங்க தானாம்.. அடுத்த ரவுண்டு இன்னும் அதிரடியாய் இருக்குமாம்

தமிழ் சினிமால புதுவரவு தான் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன். சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் மட்டும் நடித்த இவர் முதன்முறையாக வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார், தி லெஜன்ட் திரைப்படம் மூலம். இந்த படத்தை பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரவுடேலா, பிரபு, நாசர், விவேக், கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர், ஜேடி & ஜெர்ரி இயக்கி இருக்கிறார்கள், ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தோட இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்தது. இசை வெளியீட்டு விழாவிற்கு 10 முன்னணி நடிகைகள் பங்குபெற்றனர், இந்த நிகழ்ச்சிக்கு செம மாஸாக படத்தின் ஹீரோ சரவணன் என்ட்ரி கொடுத்துள்ளார்

அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்ட பல கேள்விக்கு எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பதில் அளித்தார், அதன்படி முதல் படமே பிரமாண்டமாக அமைந்தது கடவுளின் ஆசிர்வாதம் என்றும் கூறியுள்ளார்.

ஒரு நிருபர் அண்ணாச்சியிடம், உங்களுடைய ரோல் மாடல் யார் என்று கேட்டதற்கு அவர் என்னுடைய ரோல் மாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் என்றும் இனிவரும் காலங்களில் நல்ல கதையோடு கூடிய இயக்குனர் அமைந்தால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறினார்.

இன்னொரு கூடுதல் செய்தி என்னவென்றால் சமீபத்தில் அவருடைய மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்து சினிமாவில் கால் பதித்துள்ளார். விரைவில் பல முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News