வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கடைசியாக அஜித் எதிர்பார்த்ததை செய்ய போகும் மகிழ்திருமேனி.. ஏகே ஓட கேம் இனிமேதான்

அஜித் குமாருக்கு உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுலா செல்ல வேண்டும் என்பதுதான் விருப்பம். அதன் முதல் கட்டமாக தமிழகத்தில் வெள்ளக் கோயிலில் இருந்து தன்னுடைய பயணத்தை துவங்கி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் தன்னுடைய சுற்றுலாப் பயணத்தை பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய முதல் சுற்றில் இந்தியா, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை நிறைவு செய்திருக்கிறார்.

அதேபோல் ஈரோப்பா மற்றும் தாய்லாந்து நாடுகளில் சில இடங்களில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது அஜித் தனது 62-வது படமான விடாமுயற்சி படத்திற்காக டூரை முடித்து 8ம் தேதி சென்னை வந்து விட்டார். வந்தவர் ஒரு மாதம் ஓய்வு எடுக்கும் முடிவில் இருக்கிறார்.

Also Read: சர்ச்சையை கிளப்பிய அஜித்தின் ரீல் மகள் போஸ்டர்.. இதைவிட கேவலமா விளம்பரப்படுத்த முடியாதா?

ஆனால் ஓய்வு என்று சொல்ல முடியாது. இந்த ஒரு மாதத்தில் அவர் விடாமுயற்சி படத்திற்கு பொருந்தும் ஹீரோவாக ரெடியாகப் போகிறார். ஏனென்றால் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் கன்னத்தில் ஓவர் வெய்ட், வயிற்றில் சிறிய தொப்பை என அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் ஏகே .

இப்பொழுது எல்லாத்தையும் குறைக்க போகிறார். இனிமேதான் அஜித்தோட கேம் ஸ்டார்ட் ஆக போகிறது. இதுவரை அஜித் இந்த படத்தில் கதையை முழுமையாக கேட்கவில்லை. ஆகையால் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கதை சொல்வதற்கு ரெடி பண்ணி வைத்திருக்கிறார் மகிழ்திருமேனி. இனி தான் அஜித் அந்த கதையை கேட்கப் போகிறார். அதன் பின் என்ன ஆட்டம் போடப்போகிறார் என்று தெரியவில்லை.

Also Read: அஜித் நிராகரித்த 5 பிரபலங்கள்.. அவமானப்படுத்தியதால் இன்று வரை வாய்ப்பு கொடுக்காத ஏ கே

இதையெல்லாம் நினைத்து விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி தொடை நடுங்குகிறாராம். அதே சமயம் அஜித்துக்கு ஏத்த ஆக்சன் கதையை தான்அவர் கையில் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அஜித் அந்த கதையை கேட்டு படப்பிடிப்பில் இறங்கினால் மட்டுமே மகிழ்திருமேனி நிம்மதி பெருமூச்சு விட முடியும். அதுவரை அவர் பதட்டத்தோடு தான் இருந்து கொண்டிருக்கிறார்.

எனவே விடாமுயற்சியின் படப்பிடிப்பை வரும் 22ஆம் தேதி துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்களப்பணிகள் அனைத்தும் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித்தும் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் இனிவரும் விடாமுயற்சி படத்திற்கான அஜித்தின் நியூ லுக் வெளிவர போகிறது. அதை பார்க்க தல ரசிகர்களும் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

Also Read: வேர்ல்ட் டூருக்கு தயாராகும் அஜித்தின் மிரளவிடம் புகைப்படம்.. AK மேனேஜர் வெளியிட்ட ட்ரெண்டிங் ட்விட்டர் பதிவு

Trending News