கடந்த ஓராண்டுக்கு மேல் தல ரசிகர்கள் எவ்வளவோ தடவை போனி கபூரை சீண்டிப்பார்த்தும் அவர் கண்டுகொள்ளவே இல்லை. வலிமை படத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்துகொண்டார். இதுவே அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் போனி கபூரை திட்டாத வார்த்தையே இல்லை. அப்பவும் செவி கொடுக்கவில்லை. வலிமை படத்தைப் பற்றி பேசாமல் இருப்பது கூட பிரச்சனை இல்லை.
ஆனால் மற்ற மொழிகளில் பொனிகபூர் தயாரிக்கும் படங்களை பற்றிய அப்டேட்களை ஒவ்வொரு பண்டிகை தினங்களிலும் வெளியிட்டு சும்மா இருந்த அஜித் ரசிகர்களை சொரிந்து வாங்கிக் கட்டிக்கொண்டார். சமீபத்தில் கூட வலிமை பஸ்ட் லூக் போஸ்டர் இணையத்தில் லீக் ஆகி விட்டதாக ஒரு புரளியை கிளப்பி விட்டனர்.
அப்போதுகூட மனுஷன் தல ரசிகர்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக அஜித் ரசிகர்கள் கூப்பாடு போட்டுக் கத்தியது எப்படியோ போனி கபூருக்கு கேட்டு விட்டது போல. முதலமைச்சர் முதல் நரேந்திர மோடி வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.
ஏன் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் கூட தல ரசிகர்கள் இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி என்பவரிடம் அப்டேட் கேட்டு தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நடிகர் அஜீத் தன்னுடைய பங்குக்கு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையெல்லாம் பார்த்த போனிகபூர் தற்போது ஒரு வழியாக வலிமை படத்தைப் பற்றி வாயைத் திறந்து விட்டார். விரைவில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வரும் என்பதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தல ரசிகர்கள் பசியில் இருந்தவனுக்கு பிரியாணி கிடைத்தது போல சமூக வலைதளங்களில் போனி கபூரை கொண்டாடி வருகின்றனர்.