சினிமாவை பொறுத்தவரை லாபம், நஷ்டம் இரண்டுமே மாறி மாறி வரும். பெரிய பெரிய படங்களை எடுத்து முன்னணியில் இருக்கும் தயாரிப்பாளர்களே சில சமயம் தோல்விகளால் துவண்டு போவது உண்டு. அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்கள் நிறைய கடன் சுமைக்கும் ஆளாக நேரிடும்.
அப்படி ஒரு சிக்கலில் தான் தற்போது ஒரு முன்னணி தயாரிப்பாளர் மாட்டியிருக்கிறார். பல வருடங்களாக வட நாட்டில் பல படங்களை தயாரித்து முன்னணியில் இருந்த அந்த தயாரிப்பாளர் தற்போது கோலிவுட்டில் படங்களை தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் முன்னணி நடிகரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் சில திரைப்படங்களையும் இவர் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் படம் தயாரிப்பது தொடர்பாக இவர் முன்னணி பைனான்சியர் ஒருவரிடம் கடன் பெற்றிருந்தாராம்.
ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த கடன் தொகையை செலுத்த முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். அதாவது சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படம் இவருக்கு சில கோடிகள் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் காரணமாக வாங்கிய கடனை அவரால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை.
இதை நன்றாகப் புரிந்துகொண்ட அந்த பைனான்சியர் சரியாக நேரம் பார்த்து தயாரிப்பாளருக்கு சென்னையில் சொந்தமாக இருக்கும் பங்களா ஒன்றை கைப்பற்றியிருக்கிறார். அந்த பைனான்சியர் திரையுலகில் மிகவும் கறார் காட்டுபவர். அதனால் பலரும் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பார்கள். அப்படிப்பட்டவரிடம் இந்த தயாரிப்பாளர் மாட்டிக்கொண்டு சொத்தை பறிகொடுத்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.